OUR CLIENTS
வேலூர் தேர்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பு அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம்!
வேலூர் தேர்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பு அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம்! Posted on 21-Mar-2019 வேலூர் தேர்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பு  அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம்!

வேலூர், மார்ச் 21-

அரக்கோணம் மற்றும் வேலூர் நாடாளுமன்ற தொகுதிகளில் செய்யப்பட்டுள்ள தேர்தல் முன்னேற்பாட்டு பணிகள் குறித்த தேர்தல் செலவின பார்வையாளர் களுடன் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன்.தலைமையில் தேர்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பு அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

வேலூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் 2019யொட்டி வேலூர் மாவட்டத்திலுள்ள அரக்கோணம் மற்றும் வேலூர் நாடாளுமன்ற தொகுதிகளில் நிய மிக்கப்பட்டுள்ள தேர்தல் செலவின பார்வையாளர்கள் யாதுவீர் சிங், ஹாஜீஷ்குமார், உஜ்வால்குமார், ரவிகாந்த் ஆகியோர்களுக்கு வேலூர் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்காக செய்யப் பட்டுள்ள பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் தலைமையில் தேர்தல் பணிக்குழுவில் பணியாற்றும் அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று 20.3.19 நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வேலூர் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்காக அமைக்கப் பட்டுள்ள பறக்கும் படை, கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்பு குழு, உதவி தேர்தல் அலுவலர்களின் செயல்பாடுகள். மாவட்ட புகார் கண்காணிப்பு குழு, ஊடக சான்று மற்றும் கண்காணிப்பு குழு, வங்கி கணக்கு கண்காணிப்பு குழு, மது விற்பனை கண்காணிப்பு குழு, மாவட்ட தேர்தல் செலவின பார்வையாளர்கள் குழு மேலும் தேர்தல் அறிவிப்பு நாள் முதல் இதுநாள் வரையில் செய்த பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் தேர்தல் செலவின பார்வையாளர்களுக்கு விவரித்தார்கள். தேர்தல் செலவின பார்வையாளர்கள் பேசியதாவது. இந்திய தேர்தல் ஆணையத்தால் ஐனநாயக முறைப்படி நேர்மையாகவும் வெளிப்படையாகவும் நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படுகிறது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி அனைவரும் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும். வேலூர் மாவட்டத்தில் தேர்தல் செலவின கண்காணிப்பு குழு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தேர்தலுக்காக வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுபொருட்களை வழங்கி வாக்கு சேகரித்தால் இதனை தேர்தல் கண்காணிப்பு குழுவில் இடம்பெற்றுள்ள அலுவலர்கள் சரியாக கண்காணித்து பிடிக்க வேண்டும். பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் எந்த ஒரு கட்சிக்கோ நபருக்கோ சதகமாக செயலாற்ற நினைக்க கூடாது. இதனை தேர்தல் ஆணையம் கண்காணிக்கின்றது. மேலும் வாக்குக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குபவர்களை தேர்தல் ஆணையம் கண்காணிக்கின்றது என்று புதிய முறைகளில் யோசித்து செயல்படுவார்கள். ஆகவே கண்காணிப்பு பணியில் உள்ளவர்களும் எந்நேரமும் விழிப்புடன் செயல்பட்டு பணியாற்ற வேண்டும். மேலும் சாதாரண பொதுமக்களுக்கு பிரச்சனை ஏற்பாடத வண்ணம் முறையாக விசாரணை செய்து உரிய ஆவணங்கள் இருந்தால் பொருட்களை திரும்ப அளித்திட வேண்டும். சோதனைகளின் போது சந்தேகத்திற்கு உரிய ஆவணமின்றி பணம் பரிசு பொருட்கள் கைப்பற்றப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்களின் கைபேசியை சோதனை செய்து விசாரணை செய்ய வேண்டும். மேலும் அனைத்து அலுவலர்களும் தங்களின் கைபேசியில் தேர்தல் ஆணையத்தின் சி&விஜில் செயலியை பதிவிறக்கம் செய்து கைபேசியின் வாயிலாக பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கவேண்டும். வேலூர் மாவட்டத்தில் தேர்தல் பணியில் உள்ள அனைத்து அலுவலர்களும் கூடுதல் விழிப்புடன் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தேர்தல் செலவின பார்வையாளர்கள் தெரிவித்தார்கள். 
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன், சார் ஆட்சியர்கள் பிரியங்கா, இளம்பகவத், ராஜ்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெரியசாமி மற்றும் அனைத்து தேர்தல் பணிக்குழு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Label