OUR CLIENTS
27 பைசாவுக்கு ஓட்டை விற்பதா?
27 பைசாவுக்கு ஓட்டை விற்பதா? Posted on 21-Mar-2019 27 பைசாவுக்கு ஓட்டை விற்பதா?

வேலூர், மார்ச் 21-

 தேர்தலில் 27 பைசாவுக்காக ஓட்டை விற்காதீர்கள் என்ற புகைப்படம் வாட்ஸ் -ஆப்பில் வைரலாகி வருகிறது.

தமிழகம், புதுச்சேரியில் உள்ள, 40 லோக்சபா தொகுதிகளுக்கு ஏப்ரல் 18ல் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதற்கான ஆயத்த பணிகளில் தேர்தல் ஆணையமும், அரசு துறைகளும் ஈடுபட்டுள்ளன. பொது மக்களும் தங்கள் பங்கிற்கு வாக்காளர் விழிப்புணர்வு, கட்சிகளின் உண்மை நிலை போன்றவை குறித்து பல்வேறு கருத்துகளை சமூக வலைதளங்கள் மற்றும் மொபைல் போன் வழியாக பரப்பிவருகின்றனர். 
இதில் ஓட்டுக்கு பணம் வாங்க வேண்டாம் என்ற விழிப்புணர்வு படமும், வீடியோவும் வாக்காளர்களிடம் பல்வேறு விதமாக பரவுகிறது. இதில் 27 பைசாவுக்கு ஓட்டை விற்க வேண்டாம் என்ற புகைப்படம், வாட்ஸ் ஆப்பில் வைரலாகிறது. வாக்காளர் ஒருவர் தன் பைக்கில் இதுகுறித்த கணக்குடன் கூடிய விழிப்புணர்வு அட்டையை தொங்கவிட்டபடி வலம் வருகிறார். 
விழிப்புணர்வு அட்டையில் கூறியிருப் பதாவது: ஆண்டுக்கு 365 நாட்கள் வீதம் ஐந்து ஆண்டுகளுக்கு 1,825 நாட்கள் வருகின்றன. ஓட்டுக்கு 500 ரூபாய் வாங்கினால் ஒரு நாளைக்கு 27 பைசா என கணக்கிடப்படுகிறது. 
எனவே ஒவ்வொருவரும் தினமும் பல நூறு ரூபாய் உழைத்து சம்பாதிக்கும் நிலையில் இந்த 27 பைசாவுக்காக ஐந்து ஆண்டுகளுக்கு ஓட்டை விற்க வேண்டுமா?. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Label