OUR CLIENTS
காட்பாடியில் அனைத்து கட்சி கூட்டம்!
காட்பாடியில் அனைத்து கட்சி கூட்டம்! Posted on 21-Mar-2019 காட்பாடியில்  அனைத்து கட்சி கூட்டம்!

வேலூர், மார்ச் 21-

2019 ஏப்ரல் 18ம் தேதி  மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பணி குறித்து அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் வட்டாட்சியர் ஆர்.சுந்தர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் எஸ்.தினகரன், துணை வட்டாட்சியர் (முத்திரை) எம்.ரேணுகா, தேர்தல் வட்டாட்சியர் எஸ்.மகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு தேர்தல் குறித்து ஆலோசனை வழங்கினர்.இதில் அனைத்துக் கட்சியினரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. குறிப்பாக கிராமத்தில் சுவர் விளம்பரம் செய்ய உரிய வீட்டு நபரிடம் முன் அனுமதி பெறவேண்டும். 
அத்துடன் உரிய அதிகாரியிடம் ஆவணம் பெற வேண்டும். வேட்பாளர் கூட்டத்திற்கு வரும் போது சுமார் ஐந்து பேராவது ஆவணம் மூலம் அதை உரிய தேர்தல் அதிகாரியிடமும், காவல் துறை அதிகாரியிடமும் சமர்ப்பித்துமுன் அனுமதி பெற வேண்டும். 

Label