OUR CLIENTS
தேர்தல் பணியாற்ற உள்ள அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்
தேர்தல் பணியாற்ற உள்ள அலுவலர்களுக்கு பயிற்சி முகாம் Posted on 25-Mar-2019 தேர்தல் பணியாற்ற உள்ள அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்

சென்னை, மார்ச் 25-

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில், தேர்தல் பணியாற்ற உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம், நேற்று காலை தொடங்கி  நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். 

மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான தேர்தல் பயிற்சி வகுப்புகள், நேற்று முதல் இரண்டு கட்டங்களாக முன்னெடுக்கப்படுகின்றது. 
நேற்று முதற்கட்டமாக நடைபெறும் பயிற்சி வகுப்புகள் காலையில் தொடங்கி, மாலை வரை நடைபெறுகிறது. வாக்குச்சாவடிகளில் உள்ள நடைமுறை, பணியாற்றும் விதம், வாக்கு இயந்திரங்களை கையாளுதல் உள்ளிட்ட வாக்குச்சாவடி பணிகளுக்கான பயிற்சி வழங்கப்படும். பதட்டமான வாக்குச்சாவடிகளை கை யாளுதல் குறித்த பயிற்சியும் வழங்கப்படவுள்ளது. 
சென்னை
சென்னையில், தேர்தல் பணிகளை மேற்கொள்ள உள்ளவர்களுக்கான முதல்கட்ட பயிற்சி வகுப்பில் 11 ஆயிரத்து 160 பேர் கலந்து கொண்டுள்ளனர்.  சென்னையில், திருவல்லிக் கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணா நகர், சைதாப் பேட்டை, தியாகராயநகர், புரசை வாக்கம், மயிலாப்பூர், வேளச்சேரி உள்ளிட்ட 8 மையங்களில் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன.
கோயம்புத்தூர்
நாடாளுமன்ற தேர் தலை முன்னிட்டு கோயம்புத்தூர் மாவட்டம் முழுவதும் அமைக்கப் பட்டுள்ள 3 ஆயிரத்து 72 வாக்குச்சாவடிகளில் பணியாற்ற கூடிய, 14 ஆயிரத்து 746 தேர்தல் பணியாளர்களுக்கான பயிற்சி முகாம், காலையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. நிர்மலா கல்லூரி வளாகத்தில் பயிற்சி முகாமினை கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி தொடங்கி வைத்தார். 
சேலம
சேலம் மாவட்டத்தில், மக்களவைத் தேர்தல் பணியில், 15 ஆயிரத்து, 836 ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்களுக்கு, முதல்கட்ட பயிற்சி வகுப்பு நேற்று காலை தொடங்கியது.  சேலம் அஸ்தம்பட்டி, கெங்க வல்லி, மின்னாம் பள்ளி, சின்ன சீரகா பாடி, ஆத்தூர், சங்ககிரி, சின்னத்திருப்பதி உள்ளிட்ட இடங்களில் பயிற்சி முகாம் நடைபெறுகிறது. 
நாமக்கல்
இதேபோல், நாமக்கல் மக்களவைத் தொகுதியில், வாக்குச் சாவடி அலுவலர் களாக பணியாற்ற உள்ள 7 ஆயிரத்து 917, அரசு ஊழியர்கள், ஆசிரியர் களுக்கு பயிற்சி முகாம் நடைபெறுகிறது. 

Label