OUR CLIENTS
கொடநாடு கொள்ளை குற்றவாளிகள் ஜாமின் பெற திமுக உதவியது ஏன்? முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி
கொடநாடு கொள்ளை குற்றவாளிகள் ஜாமின் பெற திமுக உதவியது ஏன்? முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி Posted on 25-Mar-2019 கொடநாடு கொள்ளை குற்றவாளிகள் ஜாமின் பெற திமுக உதவியது ஏன்?  முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி

வேலூர், மார்ச் 25-

தன்னைக் கடவுள் என்று எப்போதும் கூறிக் கொண்டதில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார். 

வேலூர் மக்களவைத் தொகுதியின் கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து, சத்துவாச்சாரியில் அவர் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, தொகுதிக்குட்பட்ட மக்கள், ஏ.சி.சண்முகத்தின் மருத்துவ மனையில் இலவசமாக சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்றும், 600 ஏழை மாணவர்கள் அவரது கல்லூரியில் இலவச கல்வி பயிலலாம் என்றும் அறிவித்தார்.
தன்னைக் கடவுள் என்று ஒரு போதும் கூறிக் கொண்டதில்லை என மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி   கொடுத்தார்.
கோடநாடு கொலை, கொள்ளையை கண்டுபிடித்தது அதிமுக அரசு தான் எனக் கூறிய அவர், பூதக்கண்ணாடியை வைத்து பார்த்தாலும் அதிமுக மீது குறை கூற முடியாது எனக் கூறினார்.
இதைத் தொடர்ந்து ஆற்காடு மற்றும் முத்துக்கடை பேருந்து நிலையத்தில், பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்திக்கு ஆதரவாக அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலினை முதல்வராகவே விடமாட்டேன் எனக் கூறியவரை திமுக கூட்டணியில் வைத்திருப்பதாக சாடினார்.
கொள்கை வேறு, கூட்டணி வேறு எனத் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, பாஜகவை மதவாத கட்சி எனக் கூறும் திமுகவுக்கு, 1999ஆம் ஆண்டு அக்கட்சியுடன் கூட்டணி வைக்கும் போது தெரியவில்லையா? எனக் கேள்வி எழுப்பினார். 
பா.ம.க. வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி, சோளிங்கர் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் வெங்குபட்டு சம்பத் ஆகியோரை ஆதரித்து, சோளிங்கரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், தமிழகம் முழுவதும் சிறப்பான சாலைகள் அமைக்கப் பட்டிருப்ப  தாகவும், இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இப்படிப்பட்ட சாலைகள் இல்லை என்றும் கூறினார். தன்னை ஒருநாளும் முதல்வர் என தாம் எண்ணியதில்லை என்றும், ஒவ்வொரு விவசாயியும் முதல்வர்தான் என்றும் அவர் தெரிவித்தார். 

Label