OUR CLIENTS
மீண்டும் தோல்வியை நோக்கி ஏ.சி.சண்முகம்? வாய்ப்பை வெற்றியாக்க துடிக்கும் கதிர்ஆனந்த்!
மீண்டும் தோல்வியை நோக்கி ஏ.சி.சண்முகம்? வாய்ப்பை வெற்றியாக்க துடிக்கும் கதிர்ஆனந்த்! Posted on 25-Mar-2019 மீண்டும் தோல்வியை நோக்கி ஏ.சி.சண்முகம்?  வாய்ப்பை வெற்றியாக்க துடிக்கும் கதிர்ஆனந்த்!

வேலூர், மார்ச் 25-

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் பணம் பலம் காட்டும் வேலையில் வேட்பாளர்கள் ஏ.சி.சண்முகம், கதிர்ஆனந்த் இடையே கடும் போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது. 

வேலூர் நாடாளுமன்ற தொகுதியைப் பொறுத்த வரையில்  திமுக நேரடியாக கதிர்ஆனந்த்தை களம் இறக்கியுள்ளது. இதனால் புதிய நீதி கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட ஆயத்தமாகியுள்ளார். வேலூர் தொகுதியில் வேலூர், அணைக்கட்டு, கே.வி.குப்பம்(தனி), குடியாத்தம் (தனி), ஆம்பூர், வாணியம்பாடி ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகள் இடம்பெறுகின்றன. இந்த 6 தொகுதிகளை உள்ளடக்கியதுதான் வேலூர் நாடாளுமன்ற தொகுதி. திமுக, அதிமுக கூட்டணியில் யாருக்கு எந்த தொகுதி என்றும், யார் வேட்பாளர்கள் என்றும் பட்டியல் அறிவித்த பிறகு தெள்ளத்தெளிவாகியுள்ளன. குறிப்பாக 6 சட்டமன்ற தொகுதிகளில் வேலூர், அணைக்கட்டு தொகுதிகளில் திமுகவும், மற்ற நான்கு தொகுதிகளில் அதிமுகவும் வெற்றி பெற்றன. தற்போது காலியாகவுள்ள ஆம்பூர், குடியாத்தம்(தனி), சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது. 
வேலூர் தொகுதியில் களம் காணும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் திமுக பொருளாளர் துரைமுருகனின் வாரிசு ஆவார். கதிர் ஆனந்தின் பெயர் போட்டு உதயசூரியன் சின்னம் வரைந்து சுவர் விளம்பரங்கள் எழுதியுள்ளனர் உடன்பிறப்புகள். அத்துடன் கட்சி நிர்வாகிகளை வீடு தேடிப்போய் சந்திக்கிறார் கதிர் ஆனந்த். தனது மகனின் வெற்றிக்காக கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிர்வாகிகளின் வீடுகளுக்கு சென்று ஆதரவு திரட்டுகிறார் துரைமுருகன். திமுகவில் எப்படி முறைப்படி அறிவிப்பு வரும் முன்பே பிரசாரத்தை தொடங்கினாரோ கதிர் ஆனந்த் அதைப்போலவே புதிய நீதிகட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகமும் இரட்டை இல்லை சின்னத்தில் போட்டியிடப் போவதாக மார்ச் 13ல் அறிவித்தார். 
இந்நிலையில் கடந்த மார்ச் 15 அன்று அமைச்சர்ககள் கே.சி.வீரமணி, நீலோஃபர் கபீல் ஆகியோர் ஏ.சி.சண்முகத்தை வேட்பாளராக அறிவிப்பு செய்தனர். அந்த கூட்டத்தில் பேசிய ஏ.சி.சண்முகம், எனக்கு பெங்களூருவில் சொந்தமான மருத்துவமனை உள்ளது. இந்த ஆறு சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த கூட்டணி சொந்தங்களுக்கு எந்தப் பிரச்னை என்றாலும் அங்கு அழைத்துச் சென்று இலவசமாக சிகிச்சை அளிப்பேன் என்றார்.
 நிலைமை இப்படி இருந்தாலும் கடந்த 2014ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தாமரை சின்னத்தில் போட்டியிட்டவர் இந்த ஏ.சி.சண்முகம். திரைப்படம், சின்னத்திரை நட்சத்திரங்களை தேர்தல் பிரச்சாரத்தில் இறக்கி விட்டு கோடி கணக்கில் வாரி இறைத்தும் இரண்டாம் இடத்தையே பிடித்தார். அதனால் இம்முறை இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளார். அத்துடன் தற்போது நடைபெறும் குடியாத்தம், சோளிங்கர், ஆம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தல் செலவுகளையும் ஏ.சி.சண்முகமே ஏற்றுக் கொண்டதாகவும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்டுகிறது.
கடந்த முறை திமுக கூட்டணியில் போட்டியிட்ட முஸ்லிம் லீக் வேட்பாளர் ஏணி சின்னத்தில் போட்டியிட்டார்.
 துரைமுருகனை பகைத்து கொண்டது போன்ற காரணங்களால் திமுக வாக்குகளையும் சாதிப்பற்றுள்ள திமுக நிர்வாகிகளையும் ஏ.சி.சண்முகம் தன் வசம் ஆக்கி கொண்டார். இந்த முறையோ துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த் களத்தில் நிற்பதால் முக்கிய நிர்வாகிகளுக்கு பணத்தை இறைக்க திட்டமிட்டுள்ளார் ஏ.சி.சண்முகம். சண்முகத்துக்கு முதலியார் ஓட்டுகள் விழும் என்றால், கதிர்ஆனந்துக்கு வன்னியர் ஓட்டுகள் விழும் என்ற நிலையே இந்த வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் நிலவுகிறது. 
வன்னியர் ஓட்டுகளை கவர்வதற்கு துரைமுருகனால் திமுகவில் ஓரங்கட்டப்பட்ட வன்னியர்களை வளைக்கும் வேலைகள் வேகமாக நடக்கின்றது. மாவட்ட முன்னாள் சேர்மன் சீவூர் துரைசாமி அந்த வகையில்தான் பாமகவில் இணைந்தார். கடந்த முறை போலவே தனது தொகுதிக்காக கோடிக்கணக்கில் பட்ஜெட் போட்டிருப்பதாக  அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.  ஏ.சி.சண்முகம் முதல்கட்டமாக பூத்துகளுக்கு ரூ.20 ஆயிரம் பட்டுவாடாவை முடித்துவிட்டார். திமுக தரப்பில் ரூ.5 ஆயிரம்தான் தந்துள்ளதாக கூறப்படுகிறது! அடுத்த ரவுண்டில் திமுகவும் பலம் காட்டும் என்று கூறப்படுகிறது. 
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தாழ்த்தப்பட்டவர்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், முதலியார், வன்னியர், ரெட்டியார், நாயுடு ஆகியோரின் வாக்கு வங்கி அதிகமாக இருந்தாலும் இஸ்லாமியர்களின் வாக்குகளே வெற்றியை நிர்மானிக்க கூடியது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். 
காங்கிரஸ் 6 முறையும், திமுக 3 முறைம், திமுக கூட்டணியில் முஸ்லிம் லீக் 4 முறையும், அதிமுக 2 முறையும், திமுக, அதிமுக கூட்டணியில் பாமக தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ள வேலூரில் எம்பி தேர்தல் உஷ்ணம் அதிகமாக காணப்படுகிறது. 60 ஆண்டு கால அனுபவம் மிகுந்த துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த் நேரடியாக களத்தில் இறங்கியுள்ளார். இதனால் எனது வெற்றி பாதிக்காது. குறிப்பாக திமுகவில் உள்ளவர்கள் வாரிசு அரசியலை ஏற்கவில்லை. இதையேதான் ஏ.சி.சண்முகம் வெளியில் பேசி வருகிறார். 
ஆனால் ஏ.சி.சண்முகத்தை எளிதில் கடந்த முறையை போலவே ஏ.சி.எஸ்.ஸை புஸ்...ஸென்று போகச் செய்ய துரைமுருகனின் தேர்தல் வியூகங்கள் பணியாற்றும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. 
முதலியார் ஓட்டுகளை நம்பி இருந்து விட முடியாது. அத்துடன் பல தவறான தகவல்களை ஏ.சி.சண்முகத்துக்கு கட்சியில் இருப்போரும், முதலியார்களும் அவரது காதுகளில் அவ்வப்போது ஓதி கெடுத்து விடுகின்றனர். உண்மையில் அவர் யாரை நம்புவது என்று  தெரியாமல் குழப்பத்தில் உள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும். அதிமுக சின்னமான இரட்டை இலையில் நின்றுவிட்டால் எளிதில் வெற்றி பெற்று விட்டதாக அர்த்தம் கொள்ளமுடியாது.
 பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசை தனக்கு பிரசாரம் செய்ய வருகைதருமாறு கேட்டுள்ளார் ஏ.சி.சண்முகம். இதற்கு பதிலளித்த ராமதாசோ நீ வெற்றி பெறும் வேட்பாளர், உனக்கு நான் என்ன பிரசாரம் செய்வது என்று தந்திரமாக கூறி விட்டு கழுவுற மீனுல நழுவுற மீனாக கழன்று கொண்டார் ஐயா ராமதாஸ் என்கின்றனர் அரசியல்வட்டாரத்தில். 
இந்நிலையில், இப்போது தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் தனக்கு தேர்தல் பிரசாரம் செய்வார் என்று நம்பியுள்ளார் ஏ.சி.சண்முகம். விஜயகாந்த்தால் பேசவே முடியாத நிலையில் உள்ள அவரால் எப்படி ஏ.சி.சண்முகத்துக்கு தேர்தல் பிரசாரம் செய்வார் என்பது புரியாத புதிராக உள்ளது. 
கோடிக்கணக்கில் செலவு செய்தும் கடந்த முறை தோல்வியை தழுவினார் ஏசிஎஸ்...! இந்த முறை...! 

Label