OUR CLIENTS
கருத்து கணிப்பை நம்பாமல் தி.மு.க., அ.தி.மு.க., அலறல்!
கருத்து கணிப்பை நம்பாமல் தி.மு.க., அ.தி.மு.க., அலறல்! Posted on 25-Mar-2019 கருத்து கணிப்பை நம்பாமல்  தி.மு.க., அ.தி.மு.க., அலறல்!

வேலூர், மார்ச் 25-

கருத்து கணிப்பை நம்பாமல் தேர்தல் பணியில் தீவிர கவனம் செலுத்துமாறு அ.தி.மு.க., - தி.மு.க., தலைமைகள் ஒன்று போல தங்கள் தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளன.

தேர்தல் தொடர்பாக தனியார் ஆய்வு நிறுவனங்கள் இணையதள நிறுவனங்கள் உள்ளிட்டவை கருத்து கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. அதில் சில அ.தி.மு.க., கூட்டணிக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்றும், வேறு நிறுவனங்கள் தி.மு.க., கூட்டணி 30க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் தெரிவிக்கின்றன.
இதனால் தங்கள் தொண்டர்கள், தேர்தல் வேலையில் கவனம் செலுத்த மாட்டார்கள் என்றும் கட்சியின் வெற்றி பாதிக்கும் என்றும் அ.தி.மு.க., - தி.மு.க., தலைமைகள் கருதுகின்றன. இதையடுத்து கருத்து கணிப்பை நம்பாமல் தேர்தல் பணியில் தீவிர கவனம் செலுத்துமாறு இரு கட்சிகளும் ஒன்று போல தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளன.
இதனால் தான் சேலத்தில் அ.தி.மு.க., வேட்பாளருக்கு ஆதரவாக சமீபத்தில் பிரசாரம் செய்தபோது, தற்போது வெளியாகி வருவது கருத்து கணிப்பு அல்ல, கருத்து திணிப்பு என முதல்வர் இ.பி.எஸ்., காட்டமாக தெரிவித்தார்.
தி.மு.க., தொழில்நுட்ப பிரிவு அணியினர், கருத்து கணிப்பு உண்மையில்லை, புயல் வேகத்தில் நாம் செய்யும் தேர்தல் வேலைகளை சோர்வடைய செய்ய ஆளுங்கட்சி செய்யும் சதி என தொண்டர்களிடம் கூறி வருகின்றனர்.

Label