OUR CLIENTS
தேர்தல் விழிப்புணர்வுக்கு நூதன மொய் விருந்து!
தேர்தல் விழிப்புணர்வுக்கு நூதன மொய் விருந்து! Posted on 25-Mar-2019 தேர்தல் விழிப்புணர்வுக்கு  நூதன மொய் விருந்து!

தஞ்சாவூர், மார்ச் 25-

தேர்தலில் 100 சதவீதம் ஓட்டளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேராவூரணியில் தேர்தல் விழிப்புணர்வு மொய் விருந்து நடத்தப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி மற்றும் சுற்று வட்டாரங்களில் ஆடி மாதங்களில் நடத்தப்படும் மொய் விருந்தில் கோடி ரூபாய் வரை புழக்கம் இருக்கும். இந்நிலையில் தேர்தல் அலுவலரும், கலெக்டருமான அண்ணாதுரை உத்தரவின் படி நேர்மை யான மற்றும் 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி பேராவூரணி பேரூராட்சி அலுவலகத்தில், தேர்தல் விழிப்புணர்வு மொய் விருந்து நடத்தப் பட்டது. 
இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று, விவிபேட் இயந்திரத்தில் ஓட்டளித்து தாங்கள் யாருக்கு ஓட்டளித்தோம் என அறிந்து கொண்டனர். 
மொய் விருந்துக்கு வந்தவர்களுக்கு சந்தனம், பூ கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டு தேநீர் விருந்து வழங்கப் பட்டது. இதில் 500க்கும் மேற்பட்டவர்கள் பங் கேற்றனர்.

Label