OUR CLIENTS
குடோன், கட்டடங்களுக்கு திடீர் மவுசு!
குடோன், கட்டடங்களுக்கு திடீர் மவுசு! Posted on 25-Mar-2019 குடோன், கட்டடங்களுக்கு திடீர் மவுசு!

விழுப்புரம், மார்ச் 25-

தேர்தல் அலுவலகங் களை திறக்க அரசியல் கட்சியினர் குடோன்கள், கட்டடங்களை தேடு வதால் அதற்கு மவுசு அதிகரித்துள்ளது. 

அதேநேரம் வாடகையில் தாராளம் காட்டுவது உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. தமிழகத்தில் லோக்சபா தேர்தலை முன்னிட்டு, அ.தி.மு.க., - தி.மு.க., - அ.ம.மு.க., உள்ளிட்ட கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன.  அக்கட்சியினர் ஊழியர் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். 
இந்நிலையில் வார்டு, பேரூராட்சி செயலர்கள் தங்கள் பகுதிக்கு தேர்தல் அலுவலக இடத்தேர்வை தொடங்கிவிட்டனர்.
இதில் அதிகளவில் குடோன்கள், திறந்தவெளியில் கொட்டகை அமைக்கும் வகையிலான இடங்களை தேர்வு செய்கின்றனர். இதையறிந்த அதன் உரிமையாளர்கள், குடோன், கட்டடம், திறந்தவெளி மைதான வாடகையை இரு மடங்கு உயர்த்திவிட்டனர். 
தொழிலதிபர்கள் பலர் அரசியல் கட்சியினரின் தயவு தேவை என்பதால் இலவசமாக பயன்படுத்திக் கொள்ள தங்கள் குடோன், கட்டடம், காலிமனைகளை வழங்கி வருகின்றனர்.

Label