OUR CLIENTS
வேட்பாளர்கள் கால்படாத மலைக்கிராமம்!
வேட்பாளர்கள் கால்படாத மலைக்கிராமம்! Posted on 25-Mar-2019 வேட்பாளர்கள்  கால்படாத மலைக்கிராமம்!

தேனி, மார்ச் 25-

 இந்த ஊர் மக்களுக்கு, மறைந்த முன்னாள் முதல்வர்கள், எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா போன்றவர்களின் பெயர் தெரியும். ஆனால், அவர்கள் எந்தக் கட்சி என்று தெரியாது. 

ஜனாதிபதி, பிரதமர் என்றால் யார், அவர்களின் கடமை என்ன என்று தெரியாது. ஆனாலும், தங்கள் தொகுதி வேட்பாளர் யார் என்றே தெரியாமல், ஓட்டுப் போட்டு ஜனநாயக கடமையை ஆற்றுகின்றனர் என்றால் ஆச்சரியம் தானே. தேனி மாவட்டம், குரங்கணி - டாப் ஸ்டேஷன் செல்லும் வழியிலுள்ள, முதுவாக்குடி மலைக் கிராமம் தான், அந்த அபூர்வ ஊர். 
போடியிலிருந்து, 27 கி.மீ., தூரத்தில் உள்ள, இவ்வூரில், 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. அருகில், கீழ்முட்டம், மேல்முட்டம், பொன்னேந்தேரி போன்ற, மலைக்கிராமங்கள் உள்ளன. 
இம்மலை கிராம மக்கள் நோய்வாய்பட்டால், கரடு முரடான பாதைகளை கடந்து, குரங்கணி துணை சுகாதார நிலையத்திற்கு தான் வர வேண்டும். 
உயிருக்கு ஆபத்தான நிலை என்றால், 'டோலி' கட்டி தூக்கி வருவர். சாலை வசதி இல்லாததால், இதுவரை எந்தக் கட்சி வேட்பாளரும், பிரசாரத்திற் காக இக்கிராமத்திற்கு சென்றதில்லை.  
மாறாக, இவ்வூர்களில் உள்ள முக்கிய பிரமுகரை, 'சரிகட்டி' விடுவர். அதன் வாயிலாக, மொத்த ஓட்டும், குறிப்பிட்ட கட்சிக்கு விழுந்து விடும். 
இன்று வரை இதுவே தொடர்கிறது. இவர்களுக்கு குரங்கணியில் ஓட்டுச்சாவடி உள்ளது. 

Label