OUR CLIENTS
தேர்தல் பணிகளில் அதிகாரிகள் ஈடுபடுவதால் வெறிச்சோடிய வட்டாட்சியர் அலுவலகங்கள்!
தேர்தல் பணிகளில் அதிகாரிகள் ஈடுபடுவதால் வெறிச்சோடிய வட்டாட்சியர் அலுவலகங்கள்! Posted on 25-Mar-2019 தேர்தல் பணிகளில் அதிகாரிகள் ஈடுபடுவதால் வெறிச்சோடிய வட்டாட்சியர் அலுவலகங்கள்!

தாம்பரம், மார்ச் 25-

அதிகாரிகள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளதால் வட்டாட்சியர் அலுவலகங்கள் வெறிச் சோடிக் காணப்படுகின்றன.

மக்களவைத் தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. வருவாய்த் துறை அலுவலர்கள், தேர்தல் பணி களில் ஈடுபட்டதால் மற்ற பணிகள் முடங்கி யுள்ளன. வட்டாட்சியர் அலுவலகத்தில் எந்த பணிகளும் நடைபெறவில்லை. காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங் களும் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. வட்டாட்சியர் அலுவலகத்தில் தற்போது ஒரு சிலர் மட்டுமே பணியில் உள்ளனர். இதனால், ஜாதி, இருப்பிடம், வருமானச் சான்று உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக் காக வரும் பொது மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: தேர்தல் பணியைக் காரணம் காட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை யாரும் அலுவலகத்தில் இருப்பதில்லை. சான்றுகள் பெற இ-சேவை மையத்தில் மனு செய்தாலும் அதற்கு அனுமதி கொடுப்பது அதிகாரிகள்தான். தேர்தலைக் காரணம் காட்டி அனுமதி வழங்குவதில் காலதாமதம் செய்கின்றனர். இதுதொடர்பாக அவர்களைச் சந்திக்க சென்றால் அலுவலகத்தில் யாரும் இருப்பதில்லை. மேலும், பள்ளி, கல்லூரிகளில் சேர ஜாதி, இருப்பிடம், வருவாய் உள்ளிட்ட பல சான்றுகள் பெறுவது அவசிய மாகி உள்ளது. 
எனவே மாவட்ட நிர்வாகம் இதற்கு உரிய தீர்வு காணவேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Label