OUR CLIENTS
கூட்டணிக் கட்சியினரோடு இணக்கமாகச் செயல்படுங்கள் அமைச்சர் கே.சி.வீரமணி!
கூட்டணிக் கட்சியினரோடு இணக்கமாகச் செயல்படுங்கள் அமைச்சர் கே.சி.வீரமணி! Posted on 25-Mar-2019 கூட்டணிக் கட்சியினரோடு  இணக்கமாகச் செயல்படுங்கள்  அமைச்சர் கே.சி.வீரமணி!

வேலூர், மார்ச் 25-

கூட்டணிக் கட்சியின் வெற்றி, நமது கட்சியின் (அதிமுக) வெற்றி ஆகிய இரண்டுமே நமக்கு முக்கியம். கூட்டணிக் கட்சியினரோடு இணக்கத்துடன் தேர்தல் பிரசார பணியை மேற்கொள்ளுங்கள் என தமிழக பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, கட்சியினரைக் கேட்டுக் கொண்டார்.

சோளிங்கர் பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நெமிலியில்  நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக வேட்பாளர் சம்பத்தை ஆதரித்து அமைச்சர் கே.சி.வீரமணி பேசியது: வேலூர் மாவட்டத்தில் மக்களவை, சட்டப் பேரவை இடைத்தேர்தல்களில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறோம். எனினும், அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணிக் கட்சியான பாமகவின் மாம்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறார்கள். சோளிங்கர் சட்டப் பேரவை இடைத்தேர்தலில் நமது சின்னம் இரட்டைஇலை ஆகும். எனவே சோளிங்கர் தொகுதியில் மாம்பழம், இரட்டை இலை ஆகிய இரண்டிற்கும் வாக்கு சேகரிக்க வேண்டும். கூட்டணிக் கட்சியினரோடு இணக்கமாக செயல்பட்டு தேர்தல் பிரசாரத்தை நடத்துங்கள். நமக்கு மாம்பழமும், இரட்டை இலையும் ஒருசேர வெற்றி பெற வேண்டியது முக்கியம் என்றார் கே.சி.வீரமணி.
இக்கூட்டத்தில் தமிழக தொழிற்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பேசுகையில் நமது கூட்டணி பலமான கூட்டணி.  இக்கூட்டணியில் அனைத்துக் கட்சியினரும் இணைந்து பிரசாரத்தில் ஈடுபட்டால் வெற்றி என்பது நமக்கு எளிதாகி விடும். கூட்டணிக் கட்சியினரின் தலைவர்களது பிரசாரங்களின்போது ஏற்பாடுகளை பிரம்மாண்டமாக மேற்கொள்ளுங்கள். இரு சின்னங்களையும் மக்களின் மனதில் நிலைநிறுத்துங்கள் என்றார்.

Label