OUR CLIENTS
ஆட்டோவில் இருந்து தவறிவிழுந்த பள்ளி மாணவர் பரிதாப பலி!
ஆட்டோவில் இருந்து தவறிவிழுந்த பள்ளி மாணவர் பரிதாப பலி! Posted on 25-Mar-2019 ஆட்டோவில் இருந்து தவறிவிழுந்த  பள்ளி மாணவர் பரிதாப பலி!

வேலூர், மார்ச் 25-

வேலூரில் ஆட்டோவில் சென்றுபோது தவறி விழுந்த 5-ஆம் வகுப்பு மாணவர் மீது அந்த ஆட்டோவின் பின்சக்கரம் ஏறியது. இதில் அந்த மாணவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். 

விரிஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெகதீஸ்வரனின் மகன் திலக்கராஜன் (10). இவர் அங்குள்ள பள்ளியில் 5-ஆம் வகுப்புப் படித்து வந்தார். 23ம் தேதி காலை 7 மணியளவில் பள்ளிக்கு ஆட்டோவில் சென்றார். அந்த ஆட்டோ பள்ளி அருகே சென்றபோது திடீரென திலக்கராஜன், ஆட்டோவில் இருந்து கீழே விழுந்தார். இதில், ஆட்டோவின் பின்சக்கரம் திலக்கராஜன் மீது ஏறி இறங்கியதில் பலத்த காயமடைந்த அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த விரிஞ்சிபுரம் போலீஸார் அங்கு சென்று திலக்கராஜனின் உடலைக் கைப்பற்றி அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Label