OUR CLIENTS
மகளிர் தினம்!
மகளிர் தினம்! Posted on 25-Mar-2019 மகளிர் தினம்!

பூவிருந்தவல்லி, மார்ச் 25-

அம்பத்தூரில் தாம்ப்ராஸ் பதிவு சார்பில் மகளிர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. 

திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்து முடிந்த (08/03/19) உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, அம்பத்தூர் தாம்ப்ராஸ் பதிவு சார்பாக 24/03/19 ஞாயிற்றுக்கிழமை அன்று அம்பத்தூர் பாரதி நகரில் அமைந்துள்ள வித்யா நிகேதன் பள்ளியில் மதியம் 2 மணியில் இருந்து மாலை 6 மணி வரை மகளிருக்கான போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் சுதேசி பத்திரிக்கை ஆசிரியர் பத்மினி ரவிச்சந்திரனும் மற்றும் பதிவு பெற்ற தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஸ்ரீமதி. ஜோதி சங்கரன், மகளிர் அணி செயலாளர் ரமா கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Label