OUR CLIENTS
சுருக்குவலை பிரச்சனை எதிரொலி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை!
சுருக்குவலை பிரச்சனை எதிரொலி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை! Posted on 25-Mar-2019 சுருக்குவலை பிரச்சனை எதிரொலி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை!

கடலூர், மார்ச் 25-

கடலூர் அருகே சாமியார்பேட்டை கடற்கரையோரம் புதுவையை சேர்ந்த 19 மீனவர்கள் தடை செய்யப்பட்ட சுருக்குவலையை பயன்படுத்தி மீன்பிடித்துக்கொண்டிருந்தனர்.

இதை பார்த்த சாமியார்பேட்டை மீனவர்கள், அந்த 19 மீனவர்களையும் தட்டிக் கேட்டபோது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களையும், அவர்களின் 5 படகுகளையும் சாமியார்பேட்டை மீனவர்கள் சிறை பிடித்து கரைக்கு கொண்டு வந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் சிதம்பரம் துணை காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், மீன்வளத்துறை அதிகாரிகள், கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் சங்கீதா, தாசில்தார் சத்தியன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதன்பிறகு அவர்கள் புதுவை மீனவர்களை விடுவித்தனர். 
சுருக்குவலையை பயன்படுத்தி மீன்பிடித்த புதுச்சேரி மீனவர்களை சிறைபிடித்த சாமியார்பேட்டை பகுதி மீனவர்களை கண்டித்தும், அவர்கள் மீது மீன் வளத்துத் துறையினர் நடவடிக்கை எடுக்க கோரியும் சுருக்கு வலைக்கு ஆதரவாக உள்ள மீனவர்கள்  கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தாழங்குடா உள்ளிட்ட பகுதியில் படகுகள் அனைத்தும் கடற்கரையோரம் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இது தொடர்பாக மீனவ சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடத்தி, அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என்று மீனவர்கள் தரப்பில் தெரிவித்தனர். இது குறித்து மீன்வள துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, சுருக்குவலையை பயன்படுத்தி மீன்பிடித்த புதுச்சேரியை சேர்ந்த 19 மீனவர்களை சாமியார் பேட்டை மீனவர்கள் சிறைபிடித்து, அவர்களின் 5 படகுகளையும் கரைக்கு கொண்டுவந்தனர்.
புதுச்சேரி மீனவர்களை சிறைபிடித்த மீனவர்கள் தரப்பினர், தாங்கள் கடலில் மீன்பிடிக்க சென்றால் எங்கே தங்களை மற்ற மீனவர்கள் தாக்கி விடுவார்களோ என்ற அச்சத்தில் அந்த தரப்பு மீனவர்களில் சிலர் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வில்லை. இதனால் மேற்கொண்டு அவர்களுக்கிடையே ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும் விதமாக உரிய தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

Label