OUR CLIENTS
கக்கன் தம்பி மகனுக்கு காங்கிரசில் சீட் மறுப்பு!
கக்கன் தம்பி மகனுக்கு காங்கிரசில் சீட் மறுப்பு! Posted on 25-Mar-2019 கக்கன் தம்பி மகனுக்கு காங்கிரசில் சீட் மறுப்பு!

சென்னை, மார்ச் 25-

கக்கன் தம்பி மகனுக்கு, காங்கிரசில் சீட் மறுக்கப்பட்டுள்ளது.
காமராஜர் ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் கக்கன். நேர்மைக்கு உதாரணமாக இவரது பெயரை காங்., கட்சியினர் கூறுகின்றனர். 

இவரது தம்பி மகன் தமிழ்செல்வன், சென்னை, முகப்பேரில் வசித்து வருகிறார். சென்னை மாநகராட்சி கவுன்சிலராக 2011 & 2016 வரை பதவி வகித்துள்ளார். இவரது செயல்பாடுகளை காங்., தலைவர் ராகுல் மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதி உள்ளிட்டோர் பாராட்டிஉள்ளனர்.
லோக்சபா தேர்தலில் காங்கிரசுக்கு திருவள்ளூர் தனி தொகுதியை தி.மு.க., ஒதுக்கியது. இத்தொகுதியில் போட்டியிட தமிழ்செல்வன் விருப்ப மனு அளித்தார். காங்., செயல் தலைவர் ஜெயகுமார், எஸ்.சி., & எஸ்.டி., பிரிவு தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழ்செல்வன் உள்ளிட்ட 10 பேரை புதுடெல்லிக்கு அழைத்து காங்., மேலிட தலைவர்கள் நேர்காணல் நடத்தினர். இறுதி பட்டியலிலும் தமிழ்செல்வன் பெயர் இடம் பெற்று இருந்தது. சீட்  கிடைத்ததும் ராகுலிடம் வாழ்த்து பெறுவதற்காக டெல்லியில் தங்கியிருக்கும் படி  தமிழ்செல்வனிடம்  தமிழக, காங்., நிர்வாகிகள் கூறியிருந்தனர். அதன்படி புதுடெல்லியில் அவர் முகாமிட்டு இருந்தார்.ஆனால் தமிழ்செல்வனுக்கு பதிலாக நள்ளிரவில் ஜெயகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தன் ஆதரவாளர் என்பதால் கடைசி நேரத்தில் ராகுலிடம் பேசி காங்., மூத்த தலைவர் சிதம்பரம் மற்றும் தமிழக, காங்., தலைவர் அழகிரி ஆகியோர் ஜெயகுமாருக்கு சீட் பெற்று தந்துள்ளனர்.
காங்., தலைவர்களின் உள்குத்து நடவடிக்கையால் தமிழ்செல்வனுக்கு வேட்பாளராகும் வாய்ப்பு கடைசி நேரத்தில் பறிபோய் உள்ளது. கக்கன் தம்பி மகனுக்கு வாய்ப்பு மறுக்கப் பட்டுள்ளது காங்., கட்சியில் திடீர் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்செல்வன் போட்டியிட்டால் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கையில் இருந்த காங்., நிர்வாகிகள் மட்டுமின்றி தி.மு.க.,வினருக்கும் இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Label