OUR CLIENTS
பா.ஜ.,விற்கு ஆதரவாக நூதன ஓட்டு சேகரிப்பு அழைப்பிதழ்!
பா.ஜ.,விற்கு ஆதரவாக நூதன ஓட்டு சேகரிப்பு அழைப்பிதழ்! Posted on 25-Mar-2019 பா.ஜ.,விற்கு ஆதரவாக நூதன  ஓட்டு சேகரிப்பு அழைப்பிதழ்!

கமுதி, மார்ச் 25-

 ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில்அ.தி.மு.க., கூட்டணியில் பா.ஜ.,வேட்பாளரை ஆதரித்தும் ஓட்டு வேட்டையை அதிகரிக்கும் வகையில் கமுதி, முதுகுளத்தூர், கடலாடி பகுதியில் அ.தி.மு.க., வினர் நூதனமாக அழைப்பிதழ் பிரசாரத்தை தொடங்கி யுள்ளனர். 

தமிழகத்தில் அ.தி.மு.க., கூட்டணியில் பா.ஜ., அங்கம் வகித்து ராமநாதபுரம், சிவகங்கை, கோயம்புத்தூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 5 தொகுதிகளில் போட்டியிடுகிறது. 
இதில் ராமநாதபுரம் லோக்சபாவில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நயினார் நாகேந்திரன் அ.தி.மு.க., வில் முன்னாள் அமைச்சராக இருந்ததால் ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க., வில் பா.ஜ., கட்சி வேட்பாளர் நயினார் நாகேந்திரன் பரிச்சயமாக உள்ளார்.
இதனால்அ.தி.மு.க., கூட்டணியில் உள்ள ராமநாதபுரம் பா.ஜ., வேட்பாளரை ஆதரித்து, அ.தி.மு.க. வை சேர்ந்த ராமநாதபுரம் முன்னாள் மாவட்ட இளைஞரணி பொருளாளர் பேரையூர் ராமசாமி, முதுகுளத்தூர் நகர இளைஞரணி செயலாளர் ராஜமாணிக்கம், தகவல் தொழில்நுட்ப பிரிவு மணிகண்டன், விளங்குளத்தூர் அ.தி.மு.க., கிளை செயலாளர் முத்துமணி ஆகியோர், நூதனமாக அழைப்பிதழ் போல் நோட்டீஸ் அடித்து, முதுகுளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட கமுதி, முதுகுளத்தூர், கடலாடி பகுதிகளில் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர். 
பா.ஜ., கட்சியினரும் இதுபோன்ற நூதன பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரு லட்சம் அழைப்பிதழ்களை அச்சடித்துள்ள அ.தி.மு.க., நிர்வாகிகள் இதற்காக 5 லட்ச ரூபாய் செலவு செய்து பா.ஜ., கட்சி வேட்பாளருக் காக பிரசாரத்தில் இறங்கியுள்ளனர்.

Label