OUR CLIENTS
8 வழி சாலை திட்டத்தை கைவிடவில்லை எனில் தேர்தல் புறக்கணிப்பு & விவசாயிகள் அறிவிப்பு!
8 வழி சாலை திட்டத்தை கைவிடவில்லை எனில் தேர்தல் புறக்கணிப்பு & விவசாயிகள் அறிவிப்பு! Posted on 25-Mar-2019 8 வழி சாலை திட்டத்தை கைவிடவில்லை எனில்  தேர்தல் புறக்கணிப்பு & விவசாயிகள் அறிவிப்பு!

அரூர், மார்ச் 25-

   8 வழி சாலை திட்டத்தை கைவிடவில்லை எனில் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

 சென்னை சேலம் வரை ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் 8 வழி பசுமை சாலை திட்டம் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இத்திட்டத்திற்கு பல்வேறு அமைப்பினர் மற்றும் பாதிக்கப்படும் விவசாயிகள் என அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் தருமபுரி மாவட்டம் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 53கி.மீ தூரம் 8 வழி சாலை அமைக்க விவசாய நிலங்கள், பள்ளிக்கூடங்கள், குடியிருப்புகள் என அளவெடுக்கப்பட்டு அளவுகல் வைக்கப்பட்டது. இத் திட்டத்திற்கு எதிர்பபு தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.
இத்திட்டத்தை எதிர்த்து பாதிக்கப்படும் விவசாயிகள் ஓராண்டு முடிவடைந்ததை அடுத்து இன்று மாலகாப்பாடி கிராமத்தில் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக 8 வழிச்சாலை எதிப்பு அமைப்பினர் கண்டன கூட்டம் நடைபெற்றது. பாதிக்கப்பட்டவிவசாயிகள் பொதுமக்கள் கலந்துக்கொண்ட இக் கூட்டத்தில் வரும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் வாக்களிக்காமல் தேர்தலை புறக்கணிப்போம் எனவும் தற்போதுள்ள அரசு மீது நம்பிக்கையின்மையால் மாவட்ட ஆட்சியரிடம் வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைக்க உள்ளோம், விவசாய நிலங்களில் கருப்பு கொடியேற்றி எதிர்ப்பு தெரிவித்து மத்திய , மாநில அரசுகளுக்கு எதிராக துண்டு பிரசுரம் விநியோகம் செய்வோம் என தெரிவித்தனர். எனவே 8 வழி  பசுமை சாலை திட்டத்தை மத்திய மாநில அரசுகள், அடுத்த 7 நாட்களுக்குள் கைவிடுகிறோம் என அறிவிக்க வேண்டும். இல்லையென்றால் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.

Label