OUR CLIENTS
வனச்சரக அலுவலகம் சூறை!
வனச்சரக அலுவலகம் சூறை! Posted on 25-Mar-2019 வனச்சரக அலுவலகம் சூறை!

ஓசூர், மார்ச் 25-

 அஞ்செட்டி அருகே, மணல் கொள்ளையில் ஈடுபட்ட இருவரை வனத்துறையினர் விடுவிக்க மறுப்பு தெரிவித்ததால் வனச்சரக அலுவலகம் சூறையாடப்பட்டு குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த அஞ்செட்டி அருகே உரிகம் வனப்பகுதியில், வனச்சரகர் பழனிமுருகன் தலைமையிலான வனத்துறையினர் நேற்று முன்தினம் ரோந்து வந்தனர். அப்போது கோட்டையூரை சேர்ந்த சரவணன், குமார் ஆகியோர் வனப்பகுதியில் திருட்டுத்தனமாக டிராக்டரில் மணல் அள்ளி கொண்டிருந்தது தெரிந்தது. டிராக்டரை மணலுடன் பறிமுதல் செய்த வனத்துறையினர் உரிகம் வனச்சரக அலுவலகத்திற்கு குமார், சரவணனை அழைத்து வந்து விசாரித்தனர். இதையறிந்த கோட்டையூரை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் சரவணன், குமாரை விடுவிக்க வேண்டும் எனக் கூறி உரிகம் வனச்சரக அலுவலகம் சென்று வனத்துறை அதிகாரிகளிடம் தகராறு செய்தனர்.
அவர்களை விடுவிக்க முடியாது என வனத்துறையினர் கூறவே ஆத்திரமடைந்த 20க்கும் மேற்பட்டோர் வனச்சரக அலுவலகத்தை சூறையாடினர். மேஜை, நாற்காலி மற்றும் அலுவலக பொருட்களை அடித்து நொறுக்கி சரவணன், குமாரை விடுவித்து அழைத்து சென்றனர்.
வனச்சரகர் பழனிமுருகன் புகார்படி, அஞ்செட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Label