OUR CLIENTS
முதல்வரின் தேர்தல் பிரசார கூட்டத்தில் மூச்சுத் திணறி முதியவர் பலி!
முதல்வரின் தேர்தல் பிரசார கூட்டத்தில் மூச்சுத் திணறி முதியவர் பலி! Posted on 25-Mar-2019 முதல்வரின் தேர்தல் பிரசார கூட்டத்தில் மூச்சுத் திணறி முதியவர் பலி!

வேலூர், மார்ச் 25-

முதல்வரின் தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்ற முதியவர் நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறி இறந்தார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கே.வி.குப்பத்தில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக முதல்வர் இ.பி.எஸ். நேற்றுமுன்தினம் மாலை தேர்தல் பிரசாரம் செய்தார். 
அப்போது சோழமூர் கிராமத்தைச் சேர்ந்த தாமோதரன்(60) பங்கேற்க வந்திருந்தார். ஒரு கட்டத்தில் முதல் வரை பார்க்கும் ஆர்வத்தில் ஒருவரையொருவர் முட்டி தள்ளியதில் கூட்ட நெரிசலில் தாமோதரன் சிக்கித் தவித்தார். அப்போது மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்தார்.

Label