OUR CLIENTS
ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு ரூ.22 கோடி உதவித்தொகை
ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு ரூ.22 கோடி உதவித்தொகை Posted on 25-Mar-2019 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு ரூ.22 கோடி உதவித்தொகை

சென்னை, மார்ச 25-

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு 22 கோடி ரூபாயை இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆகியவை வழங்கின.

சென்னை சேப்பாக்கத்தில் நேற்று முன்தினம் போட்டி தொடங்குவதற்கு முன் உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடக்கவிழாவை ரத்து செய்துவிட்டு அதற்கென ஒதுக்கப்பட்ட 20 கோடி ரூபாயை, ராணுவத்திற்கு 11 கோடி ரூபாயும், துணை ராணுவப் படைக்கு 7 கோடி ரூபாயும், கடற்படை மற்றும் விமானப்படைக்கு தலா ஒரு கோடி ரூபாயும் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் பிரித்து வழங்கினர். ஐ.பி.எல். தொடக்க ஆட்டத்தில் டிக்கெட் விற்பனை மூலம் கிடைத்த 2 கோடி ரூபாயை நலநிதியாக துணை ராணுவப் படை அதிகாரியிடம் சென்னை அணியின் கேப்டன் தோனி வழங்கினார்.

Label