OUR CLIENTS
மியாமி ஓபன் நவோமி ஒசாகா, ஏஞ்சலிக் கெர்பர் அதிர்ச்சி தோல்வி
மியாமி ஓபன் நவோமி ஒசாகா, ஏஞ்சலிக் கெர்பர் அதிர்ச்சி தோல்வி Posted on 25-Mar-2019 மியாமி ஓபன் நவோமி ஒசாகா, ஏஞ்சலிக் கெர்பர் அதிர்ச்சி தோல்வி

புளோரிடா, மார்ச் 25-

மியாமி ஓபன் டென்னிஸில் முன்னணி வீராங்கனைகளான நவோமி ஒசாகா, ஏஞ்சலிக் கெர்பர் ஆகியோர் தோல்வியடைந்தனர். 

மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் புளோரிடாவில் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் முதல்தர வீராங்கனையான ஜப்பானின் நவோமி ஒசாகா, தைவானின் சு-வெய்-ஐ எதிர்கொண்டார்.
முதல் செட்டை ஒசாகா 6-4 என எளிதில் கைப்பற்றினார். ஆனால் 27ம் நிலை வீராங்கனையான சு-வெய் 2வது சுற்றில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் 2வது செட் 'டை-பிரேக்கர்' வரை சென்றது. இறுதியில் சு&வெய் 7(7)-6(4) என 2வது செட்டை கைப்பற்றினார். 3வது செட்டில் ஒசாகா கடுமையாக போராடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 3-6 என எளிதில் தோல்வியடைந்தார். இதனால் சு-வெய் ஒசாகாவை வீழ்த்தி 4வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் 8ம் நிலை வீராங்கனையான ஏஞ்சலிக் கெர்பர் தரநிலை பெறாத கனடாவின் அண்ட்ரீஸ்குவை எதிர்கொண்டார். முதல் செட்டை அண்ட்ரீஸ்கு 6-4 எனக் கைப்பற்றினார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கெர்பர் 2வது செட்டை 6-4 எனக்கைப்பற்றினார். ஆனால், 3வது செட்டில் 1-6 என சரணடைந்ததால், ஏஞ்சலிக் கெர்பர் தோல்வியடைந்து வெளியேறினார். பெர்ட்டன்ஸ், கோன்டாவெயிட், வோஸ்னியாக்கி ஆகியோர் வெற்றி பெற்று 4வது சுற்றுக்கு முன்னேறினர்.

Label