OUR CLIENTS
தோனியை தொந்தரவு செய்ததாக காவல்துறை உயரதிகாரிகளின் பிள்ளைகள் மீது புகார்
தோனியை தொந்தரவு செய்ததாக காவல்துறை உயரதிகாரிகளின் பிள்ளைகள் மீது புகார் Posted on 25-Mar-2019 தோனியை தொந்தரவு செய்ததாக  காவல்துறை உயரதிகாரிகளின் பிள்ளைகள் மீது புகார்

சென்னை, மார்ச் 25-

காவல்துறை உயரதிகாரிகளின் பிள்ளைகள் கிரவுன் பிளாசா ஓட்டலில் தங்களுடன் புகைப்படம் எடுக்கக் கோரி தொந்தரவு செய்வதாக சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி, அணியின் மேலாளரிடம் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐ.பி.எல்., போட்டிகளில் பங்கேற்க தோனி சென்னை கிரவுன் பிளாசா நட்சத்திர விடுதியில் தங்கியுள்ளார். அங்கு பாதுகாப்பு மிக்க அவரது தளத்துக்கு வந்த காவல்துறை உயரதிகாரிகளின் பிள்ளைகள் சிலர் உடன் புகைப்படம் எடுக்க வேண்டும் எனக் கூறி தொந்தரவு செய்வதாக, அணியின் மேலாளர் ரசூலிடம் தோனி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மேலாளர் ரசூல் தோனியின் புகார் குறித்து சென்னை காவல் தெற்கு இணை ஆணையரிடம் தகவல் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

Label