OUR CLIENTS
சமந்தா, காஜல், தமன்னாவின் வினோத ஆசை!
சமந்தா, காஜல், தமன்னாவின் வினோத ஆசை! Posted on 25-Mar-2019 சமந்தா, காஜல், தமன்னாவின் வினோத ஆசை!

ஹீரோயின்கள் எல்லாம் வில்லியாக ஆசைப்படுகிறார்கள். ஹீரோயின், வில்லி என்று இரண்டு கதாபாத்திரங்களிலுமே அசத்தி வருபவர் வரலட்சுமி சரத்குமார். அதிலும் குறிப்பாக வில்லத்தனம் செய்வதில் அவர் ஸ்பெஷலிஸ்டாக உள்ளார். இந்நிலையில் சில ஹீரோயின்களுக்கும் வில்லியாகும் ஆசை வந்துள்ளது.
சுந்தர் சி. இயக்கத்தில் விஷால் ஹீரோவாக நடிக்கும் படத்தில் தமன்னாவுக்கு வில்லத்தனமான கதாபாத்திரமாம். வித்தியாசமாக ஏதாவது கிடைக்காதா என்று எதிர்பார்த்த தமன்னா அந்த கதாபாத்திரத்தில் நடிக்க சந்தோஷமாக ஒப்புக் கொண்டுள்ளார். 
 ஒரே மாதிரி நடித்து போர் அடிக்கிறது என்று அடிக்கடி கூறி வந்த காஜல் அகர்வாலும் வில்லியாக மாறியுள்ளார். சீதா என்கிற தெலுங்கு படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம் காஜல். சூப்பர் டீலக்ஸ் படத்தில் சமந்தாவின் கதாபாத்திரம் எதிர்மறையானது என்று கூறப்படுகிறது. த்ரிஷா ஏற்கனவே கொடி படத்தில் வில்லியாக நடித்துவிட்டார்.  முன்பெல்லாம் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க ஹீரோயின்கள் அஞ்சுவார்கள். வில்லியாக நடித்தால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று பயப்படுவார்கள். ஆனால் தற்போது உள்ள நடிகைகளோ வில்லத்தனம் செய்ய துடிக்கிறார்கள்.  இப்படி ஹீரோயின்கள் எல்லாம் வில்லியாக மாறிவிட்டால் நம் வில்லி  வரலட்சுமி சரத்குமார் என்ன செய்வார்?. நிச்சயம் மாற்றி யோசித்து ஏதாவது செய்வார்.. ரொம்ப தெளிவாச்சே...

Label