OUR CLIENTS
நாட்டின் முதல் லோக்பால் தலைவராக நீதியரசர் பினாகி சந்திரகோஷ் பதவியேற்பு
நாட்டின் முதல் லோக்பால் தலைவராக நீதியரசர் பினாகி சந்திரகோஷ் பதவியேற்பு Posted on 25-Mar-2019 நாட்டின் முதல் லோக்பால் தலைவராக  நீதியரசர் பினாகி சந்திரகோஷ் பதவியேற்பு

புதுடெல்லி, மார்ச் 25-

நாட்டின் முதல் லோக்பால் தலைவராக நீதியரசர் பினாகி சந்திரகோஷ்  பதவியேற்றுக் கொண்டார். 

 குடியரசுத் தலைவர் மாளிகையில் இதற்கான விழா நடைபெற்றது. நீதியரசர் பினாகி சந்திரகோஷூக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த விழாவில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், குடியரசு துணைத் தலைவர் வெங்கையாநாயுடு, பிரதமர் நரேந்திரமோடி, ஆகியோரும் கலந்து கொண்டனர். ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புக்காக உருவாக்கப்பட்டுள்ள லோக்பால் சட்டம் 2014ஆம் ஆண்டின் தொடக்கத்தில் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றது.
நீண்ட இழுத்தடிப்புக்குப் பின்னர் இதன் தலைவராக உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி பினாகி சந்திரகோஷை, பிரதமர் மோடி தலைமையிலான உயர்மட்டக் குழு நியமித்தது.
இந்தக் குழுவில் நீதித் துறையை சேர்ந்த  நான்கு பேர், நீதித்துறையைச் சாராத 4 பேர் என மொத்தம் 8 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். 

Label