OUR CLIENTS
2025ஆம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத இந்தியா உருவாகும் பிரதமர் நரேந்திர மோடி உறுதி
2025ஆம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத இந்தியா உருவாகும் பிரதமர் நரேந்திர மோடி உறுதி Posted on 25-Mar-2019 2025ஆம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத இந்தியா உருவாகும் பிரதமர் நரேந்திர மோடி உறுதி

புதுடெல்லி, மார்ச் 25-

2025ஆம் ஆண்டுக்குள் மத்திய மாநில அரசுகளின் கடின உழைப்பால் காசநோய் இல்லாத இந்தியா உருவாகும் என்று பிரதமர் நரேந்திர நேற்று உறுதியளித்துள்ளார்.

காசநோய் எழுச்சியை ஒழிக்கும் முயற்சிகளைத் தீவிரப்படுத்தவும், சுகாதாரம், சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் காசநோய் ஏற்படுத்தும் விளைவுகளைப் பற்றிய பொதுமக்களின் விழிப்புணர்வை அதிகரிக்கவும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 24ஆம் தேதி உலக காசநோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 1882ஆம் ஆண்டு இதே நாளில் டாக்டர் ராபர்ட் கோச் காசநோயை உருவாக்கும் நுண்ணுயிரி கண்டுபிடிக்கப்பட்டதை அறிவித்தார்.
இந்நிலையில், நேற்று உலக காசநோய் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரதமர் மோடி டுவிட்டரில், காசநோய் இல்லாத சமூகம் என்ற இலக்கை நோக்கிய பயணத்தில் அரசு உறுதியாக செயல்பட்டு வருகிறது. இது ஏழை எளிய மக்களுக்கு பயனுள்ளதாக அமையும். சரியான மற்றும் முழுமையான சிகிச்சையை பெற்றால் காசநோயை வெல்லலாம். காசநோய் அல்லாத சமூகத்தை உருவாக்க முயற்சிகளை முன்னெடுக்கும் மக்கள், அமைப்புகள் ஆகியோருக்கு நான் தலைவணங்குகிறேன், என்று குறிப்பிட்டுள்ளார்.
வரும் 2025ஆம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்கவேண்டும் என்று மத்திய மற்றும் மாநில அரசுகள் கடுமையாக உழைத்து வருகின்றன. சர்வதேச அளவில் 2030 ஆம் ஆண்டுக்குள் காசநோய் ஒழிக்கப்படவேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு 5 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் ஒழிக்கப்படும், என்று உறுதியாக தெரிவித்துள்ளார்.
காசநோய் இல்லாத இந்தியா பிரச்சாரம் மற்றும் ஆயுஷ்மான் பாரத் என்ற முயற்சிகள் மூலம் சுகாதார தரங்களை மேம்படுத்தவும், காசநோய் நோயாளிகளுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்து வருகின்றது, என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

Label