OUR CLIENTS
காங்கிரஸ் கட்சியின் 8-வது கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு
காங்கிரஸ் கட்சியின் 8-வது கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு Posted on 25-Mar-2019 காங்கிரஸ் கட்சியின் 8-வது கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு

புதுடெல்லி, மார்ச் 25-

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் மேலிடம் அறிவித்து வருகிறது.

இதுவரை ஏழு கட்டமாக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு இருந்தது. 7-வது பட்டியலில் முன்னாள் மத்திய அமைச்சர் ரேணுகா சவுத்ரி, ராஜ்பப்பர் இடம்பெற்று இருந்தனர்.
இந்நிலையில் 8-வது கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி நள்ளிரவில் வெளியிட்டது. இதில் 38 தொகுதிக்கான வேட்பாளர்கள் இடம் பெற்று உள்ளனர். கர்நாடகா, மராட்டியம், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய மாநிலங்களுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
பாராளுமன்ற மக்களவை எதிர்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மல்லிகார்ஜூன் கார்கே கர்நாடகா மாநிலம் குல்பர்கா தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். 2014-ம் ஆண்டு தேர்தலில் அவர் 74 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் அந்த தொகுதியில் வெற்றி பெற்று இருந்தார். கர்நாடகாவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர்களான வீரப்ப மொய்லி சித்பலாபூர் தொகுதியிலும், கே.எம். முனியப்பா கோலார் தொகுதியிலும் மீண்டும் போட்டியிடுகிறார்கள். மராட்டிய முன்னாள் முதலமைச்சரான அசோக் சவான் நான்டட் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.
மத்திய பிரதேச முன்னாள் முதலமைச் சரா£ன திக்விஜய்சிங் போபால் தொகுதியிலும், உத்தரகாண்ட் முன்னாள் முதலமைச்சருமான ஹரீஷ் ராவத் நைனிடால் தொகுதி யிலும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
உத்தரகாண்ட் பா.ஜனதா முன்னாள் முதலமைச்சர் பி.சி. கந்தூரியின் மகன் மணிஷ் கந்தூரிக்கு கார்வல் தொகுதி ஒதுக்கப் பட்டுள்ளது. அவர் சமீபத்தில்தான் ராகுல்காந்தி முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார். ராகுல் காந்தியின் நெருங்கிய உதவியாளரான மீனாட்சி நடராஜன் மத்திய பிரதேச மாநிலம் மன்டெனர் தொகுதியிலும், முன்னாள் செய்தி தொடர்பாளர் ரஷீத் ஆல்வி உத்தர பிரதேச மாநிலம் அம்ரோகா தொகுதியிலும் போட்டி யிடுவார்கள். காங்கிரஸ் கட்சி இதுவரை 218 தொகுதி களுக்கான வேட்பாளர்களை அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Label