OUR CLIENTS
மனோகர் பரிக்கருக்கு பாரத ரத்னா விருது கோவா அரசு வலியுறுத்தல்
மனோகர் பரிக்கருக்கு பாரத ரத்னா விருது கோவா அரசு வலியுறுத்தல் Posted on 25-Mar-2019 மனோகர் பரிக்கருக்கு பாரத ரத்னா விருது  கோவா அரசு வலியுறுத்தல்

கோவா, மார்ச் 25-

மறைந்த கோவா முதல்வர் மனோகர் பரிக்கருக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று தற்போதைய கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார். 

கோவா முதல்வராக இருந்த மனோகர் பரிக்கர் கணைய புற்றுநோய் காரணமாக கடந்த மார்ச் 15ஆம் தேதி காலமானார். 
இந்நிலையில், நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது அவருக்கு வழங்க வேண்டும் என்று தற்போதைய முதல்வர் பிரமோத் சாவந்த் பரிந்துரை செய்துள்ளார். 
இதுகுறித்து அவர், மனோகர் பரிக்கர் கோவா முதல்வராக மட்டுமன்றி நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் செயலாற்றியுள்ளார். 
அவர் நாட்டின் மிக உயர்ந்த தலைவர். பாரத ரத்னா விருது பெறுவதற்கான தகுதி அவருக்கு உள்ளது. எனவே, அவருக்கு அடுத்த ஆண்டு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும், என்று கூறியுள்ளார். 

Label