OUR CLIENTS
பிரதமர் மோடிக்கு பொருளாதாரம் பற்றி எதுவும் தெரியாது பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தாக்கு
பிரதமர் மோடிக்கு பொருளாதாரம் பற்றி எதுவும் தெரியாது பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தாக்கு Posted on 25-Mar-2019 பிரதமர் மோடிக்கு பொருளாதாரம் பற்றி எதுவும் தெரியாது பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தாக்கு

கொல்கத்தா, மார்ச் 25-

பிரதமர் மோடிக்கும், நிதி அமைச்சர் அருண் ஜேட்லிக்கும் பொருளாதாரம் என்றால் என்னவென்றே தெரியாது என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி பேசியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா நகரில், Annual Kolkatta Dialogue 2019, நிகழ்ச்சி நேற்றுமுன்தினம் நடந்தது. இதில் பாஜக எம்பி சுப்பிரமணிய சுவாமி கலந்துகொண்டு உரையாற்றினார். இதில் பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடிக்கும், நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கும் பொருளாதாரம் குறித்து எதுவும் தெரியாது. உலகப் பொருளதாரத்தில் இந்தியா 6ஆவது இடத்தில் இருக்கிறது என்று மோடியும், ஜெட்லியும் தொடர்ந்து கூறி வருகின்றனர். ஆனால் உண்மையில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்து 3ஆவது இடத்தில் இந்தியா இருக்கின்றது, அது அவர்களுக்குத் தெரியுமா?, என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
உலக அளவில் மக்களின் வாங்கும் திறனை அடிப்படையாகக் கொண்டுதான் நாட்டின் பொருளாதார வளர்ச்சியைக் கணக்கிடவேண்டும். அவ்வாறு பார்த்தால், அமெரிக்கா முதலிடத்திலும், சீனா இரண்டாவது இடத்திலும், இந்தியா 3ஆவது இடத்திலும் உள்ளன. ஆனால், ஏன் நமது பிரதமர் மோடி இந்தியா 6ஆவது இடத்தில் இருக்கிறது என்று சொல்கிறார். இது ஏன் என எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவருக்கும் பொருளாதாரம் தெரியாது. நிதியமைச் சருக்கும் பொருளாதாரம் தெரியாது. அந்நிய செலாவணி அடிப்படையில் நாட்டின் வளர்ச்சியைக் கணக்கிடக் கூடாது. செலாவணி மதிப்பில் ஏற்றம் இறக்கம் இருப்பது இயல்பானது என்று விளக்கமாகக் கூறி மோடிக்குக் கடிதம் எழுதினேன். மோடி சொல்வதுபோல் செலாவணி மதிப்பில் கணக்கிட்டால்கூட இந்தியா 6ஆவது இடத்தில் இருக்காது, 7ஆவது இடத்தில்தான் இருக்கிறது. ஒருநாட்டின் பொருளாதார வளர்ச்சியின் அளவை கணக்கிட சரியான வழி என்பது மக்களின் வாங்கும் சக்தியை வைத்துக் கணக்கிடுவதுதான். அந்த வகையில், அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்த இடத்தில் உலக அளவில் இந்தியா இருக்கிறது. காலனி ஆதிக்கத்துக்குப் பின் செழிப்பான நாடுகளில் சீனாவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா இருக்கிறது, என்று சுப்பிரமணிய சுவாமி பேசினார்.

Label