OUR CLIENTS
அத்வானிக்கு கட்டாய ஓய்வா? பாஜகவுக்கு சிவசேனா கண்டனம்
அத்வானிக்கு கட்டாய ஓய்வா? பாஜகவுக்கு சிவசேனா கண்டனம் Posted on 25-Mar-2019 அத்வானிக்கு கட்டாய ஓய்வா?  பாஜகவுக்கு சிவசேனா கண்டனம்

மும்பை, மார்ச் 25-

குஜராத்தின் காந்தி நகர் தொகுதியில் அத்வானிக்கு பதில் அமித் ஷா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனை கண்டித்த சிவசேனா, வலுகட்டாயமாக அத்வானியை ஓய்வுபெற செய்துள்ளதாக கூறியுள்ளது. 

பாஜக மூத்த தலைவர் அத்வானியின் பெயர் வரும் மக்களவை தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை. காந்தி நகர் எம்பியான அத்வானியின் பெயருக்கு பதிலாக அமித் ஷா பெயரை வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது. இந்நிலையில், பாஜகவின் கூட்டணி கட்சியான சிவசேனா இதற்கு கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது.
சிவசேனாவின் நாளிதழான சாம்னாவில், குஜராத்தின் காந்தி நகர் தொகுதியில் இருந்து 6 முறை மக்களவைக்கு தேர்வானவர் இந்திய அரசியலின் பீஷ்மரான அத்வானி. ஆனால், இம்முறை அமித் ஷா அந்த தொகுதியில் களமிறக்கப் படுகிறார். இதிலிருந்து ஒன்று மட்டும் நன்றாக தெரிகிறது. அவரை வலுகட்டாயமாக ஓய்வுபெற செய்துள்ளது தெளிவாகிறது, என்று குற்றஞ்சாட்டியுள்ளது.
பாஜகவின் அத்வானி காலத்தில் ஏற்பட்ட வளர்ச்சி முடிவுக்கு வந்துள்ளது. பாஜகவின் நிறுவனர்களில் ஒருவர் அத்வானி, முன்னாள் பிரதமர் அட்டல் பிகாரி வாஜ்பாயி உடன் இணைந்து கட்சியை சரியான பாதையில் வழநடத்திச் சென்றார். ஆனால், இப்போது வாஜ்பாய் - அத்வானி இடத்தை நரேந்திர மோடியும் - அமித் ஷாவும் ஆக்கிரமித்துள்ளனர். பாஜக மூத்த தலைவர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்படாத சூழல் அந்த கட்சியில் தற்போது ஏற்பட்டுள்ளது, என்று விமர்சித்துள்ளது.
வரும் மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள சிவசேனா தொடர்ந்து பாஜகவை கடுமையாக சாடி வருகிறது. இது, வரவிருக்கும் தேர்தலில் பாதிப்பு ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Label