OUR CLIENTS
லடாக் பகுதியில் சிக்கி தவித்த 187 பேர் பத்திரமாக மீட்பு
லடாக் பகுதியில் சிக்கி தவித்த 187 பேர் பத்திரமாக மீட்பு Posted on 25-Mar-2019 லடாக் பகுதியில் சிக்கி தவித்த 187 பேர் பத்திரமாக மீட்பு

ஜம்மு காஷ்மீர், மார்ச் 25-

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தற்போது கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது.

இதனால் பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இந்நிலையில் பனிப்பொழிவில் சிக்கி தவித்த 187 பேர் இந்திய விமானப்படை விமானம் மூலம் பத்திரமாக மீட்கப் பட்டதாக ராணுவ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கடும் பனிப்பொழிவு காரணமாக ஸ்ரீநகர், லடாக் 434 கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 
இதனால் அந்த பகுதியில் முற்றிலுமாக ‌போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Label