OUR CLIENTS
பாகிஸ்தானுக்கு போர் மீது நம்பிக்கையில்லை- அதிபர் ஆரிப் அலி
பாகிஸ்தானுக்கு போர் மீது நம்பிக்கையில்லை- அதிபர் ஆரிப் அலி Posted on 25-Mar-2019 பாகிஸ்தானுக்கு போர் மீது நம்பிக்கையில்லை-  அதிபர் ஆரிப் அலி

இஸ்லாமாபாத், மார்ச் 25-

பாகிஸ்தானுக்கு போர் மீது நம்பிக்கையில்லை என்று அந்நாட்டு அதிபர் ஆரிப் அலி தெரிவித்துள்ளார்.

தீவிரவாதத் தாக்குதல், எல்லையில் அத்துமீறல் துப்பாக்கிச் சூடு போன்றவற்றால் இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்ற நிலை அதிகரித்து வரும் நிலையில் இருநாடுகளுக்கும் இடையே மீண்டும் போர் மூளக்கூடும் என்ற அச்சம் தெற்காசியாவில் பரவியுள்ளது.
இந்நிலையில், ராணுவ அணிவகுப்பில் கலந்துக் கொண்ட பாகிஸ்தான் அதிபர் ஆரிப் அலி, நமது உண்மையான யுத்தம் வறுமையுடனும் வேலை வாய்ப்பின்மையுடனும்தான் என்றார்.
போரில் நம்பிக்கை இல்லை என்றும், பாகிஸ்தான் அமைதியை விரும்புவதாகவும் ஆரிப் அலி மேலும் தெரிவித்தார்.  

Label