OUR CLIENTS
பொன்.ராதாகிருஷ்ணன் வாகனத்தை பறிமுதல் செய்தது தேர்தல் பறக்கும் படை!
பொன்.ராதாகிருஷ்ணன் வாகனத்தை பறிமுதல் செய்தது தேர்தல் பறக்கும் படை! Posted on 25-Mar-2019 பொன்.ராதாகிருஷ்ணன் வாகனத்தை பறிமுதல் செய்தது தேர்தல் பறக்கும் படை!

சென்னை, மார்ச் 25-

மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணனின் தேர்தல் பிரசார வாகனத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

தமிழகத்தின் பல இடங்களில் நடைபெற்ற வாகன சோதனையில் கட்டுக்கட்டாக பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், உரிய ஆவணங்களின்றி இயக்கப்பட்ட மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் வாகனத் தையும் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னையில் உரிய ஆவணங்கள் இன்றி ஏடிஎம் மையங்களுக்கு எடுத்து செல்லப்பட்ட 50 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். ஆலந்தூரில் மார்க்கெட் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது கார் ஒன்றை மடக்கி சோதனையிட்டதில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது. விசாரணையில் ஏடிஎம் மையங்களுக்கு நிரப்ப எடுத்து செல்வது தெரியவந்த போதும், உரிய ஆவணங்களின்றி எடுத்து வந்ததால் அவற்றை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
திருப்பூரில் இருவேறு இடங்களில் உரிய ஆவணங்கள் இல்லாமல்  கொண்டு செல்லப்பட்ட 10 லட்சம் ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர். உடுமலையில் 5 கிலோ தங்கநகைகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செந்தில்குமார் என்பவர் வீட்டு விஷேசத்துக்காக எடுத்துச்சென்ற 7 லட்சம் ரூபாய்க்கு ஆவணங்கள் இல்லை என்பதால் அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதேபோல் போஸ் வர்கீஸ் என்பவரிடம் இருந்து 3 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தப் பணத்தை அதிகாரிகள் தாசில்தார் அலுவலகம் மற்றும் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
இதனிடையே உடுமலையில் தனியார் நகைக்கடையில் இருந்து கோவை குடோனுக்கு எடுத்துச்செல்லப்பட்ட 5 கிலோ தங்க நகைகளையும் பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர். உரிய ஆவணங்களை நகைக்கடை ஊழியர்கள் கொண்டு சென்றதால் உரிய விளக்கத்துடன் நகை திரும்ப அளிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
ஆண்டிபட்டியில் ஆவணங்கள் இன்றி செல்வம் என்பவர் காரில் கொண்டு சென்ற 2,30,000 ரூபாயை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
இவர் வீடுகட்ட எடுத்துச் சென்றதாக கூறினார், உரிய ஆவணங்களை காட்டிவிட்டு பணத்தை வாங்கிச் செல்ல அதிகாரிகள் அறிவுறுத்தினர். இதேபோல் திருச்செந்தூர் அருகிலுள்ள உடன்குடியில் முறையான ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ஒரு லட்சத்து ஏழாயிரம் பணத்தினை துணிக்கடை உரிமையாளர் விக்னேஷிடமிருந்து தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
வந்தவாசி அருகே டாடா ஏஸ் வாகனத்தில் சென்றவர்கள் உரிய ஆவணங்களின்றி எடுத்து வந்த ரூ.3,46,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
சேலத்தில் இருவேறு இடங்களில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மேற்கொண்ட வாகன சோதனையில் இருந்து16 லட்சம் மதிப்பிலான 1,614 பட்டுப்புடவைகள் சிக்கியன. இது வாக்காளர்களுக்கு அளிக்கப்பட எடுத்துச் செல்லப்பட்டதா, இல்லை வணிகத்துக்காக எடுத்துச்செல்லப்பட்டதா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே  மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணனின் தேர்தல் பிரசார வாகனத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். உரிய ஆவணங்கள் இன்றி கன்னியாகுமரிக்கு கொண்டு செல்லப்பட்ட அந்த வாகனத்தை அதிகாரிகள் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

Label