OUR CLIENTS
அதிமுகவை அடகு வைத்த எடப்பாடி பழனிசாமி பிரசார கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
அதிமுகவை அடகு வைத்த எடப்பாடி பழனிசாமி பிரசார கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு Posted on 25-Mar-2019 அதிமுகவை அடகு வைத்த எடப்பாடி பழனிசாமி பிரசார கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

தர்மபுரி, மார்ச் 25-

கொலை குற்றச்சாட்டில் இருந்து தன்னை காப்பாற்றி கொள்ள அ.தி.மு.க.வை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடகு வைத்துவிட்டார் என்று அரூர் பிரசார கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் டாக்டர் எஸ்.செந்தில்குமார் மற்றும் பாப்பி ரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் ஆ.மணி, அரூர் (தனி) சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கிரு‌‌ஷ்ணகுமார் ஆகியோரை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் தர்மபுரி மாவட்டம் அரூர் கச்சேரி மேட்டில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தி.மு.க. வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசியதாவது:- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் சேலத்தில் பிரசாரத்தை தொடங்கி உள்ளார். இங்கு கூடியுள்ள கூட்டத்தில் கால்வாசி கூட்டம் கூட அவர்களுக்கு கூடவில்லை. திறந்தவெளி வேனில் காலியாக உள்ள சாலைகளில் முதலமைச்சர் பிரசாரம் செய்கிறார். சேலத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தன்னை நம்பி அ.தி.மு.க.வை விட்டு சென்று உள்ளதாக பேசி உள்ளார். ஆனால் எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவையும் மறந்த எடப்பாடி பழனிசாமி மோடியையும், அமித்‌ஷாவையும் தெய்வமாக வணங்கி கொண்டிருக்கிறார். அ.தி.மு.க.வை அமித்‌ஷாவிடம் அடகு வைத்துவிட்டார். தன் மீது சுமத்தப்பட்ட கொலை குற்றச்சாட்டில் இருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ளவே எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.கவை அமித்‌ஷாவிடம் அடகு வைத்து உள்ளார்.
அ.தி.மு.க.வின் கதை என்று பல்வேறு கோணங்களில் விமர்சனம் செய்து ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டவர் பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ். ஜெயலலிதாவை திட்டி தீர்த்து புத்தகம் எழுதியவரிடம் எடப்பாடி பழனிசாமி கூட்டணி வைத்து உள்ளார். இவர் எப்படி ஜெயலலிதா வழியில் செயல்படுவார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மோடியா? லேடியா? என்று கேள்வி கேட்டவர் ஜெயலலிதா. தற்போது அதை மறந்து விட்டு தங்களை காப்பாற்றிக் கொள்ள கட்சியை அடமானம் வைத்துவிட்டு பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்து உள்ளனர்.
இந்தியாவே திரும்பி பார்க்கும் அளவிற்கு மெகா கூட்டணி அமைத்து இருப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். மெகாகூட்டணி என்ற பெயரில் மோசமானவர்கள் எல்லாம் சேர்ந்து கூட்டணி அமைத் திருக்கிறார்கள். மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே ஆட்சி நடந்தால் தமிழகம் வளர்ச்சி பெறும் என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். 

Label