OUR CLIENTS
சட்டமன்ற தொகுதிகளுக்கு எப்போது தேர்தல் அறிவித்தாலும் நடத்த தயார் தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு
சட்டமன்ற தொகுதிகளுக்கு எப்போது தேர்தல் அறிவித்தாலும் நடத்த தயார் தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு Posted on 25-Mar-2019 சட்டமன்ற தொகுதிகளுக்கு எப்போது  தேர்தல் அறிவித்தாலும் நடத்த தயார் தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு

சென்னை, மார்ச் 25-

தமிழகத்தில் மக்களவை தேர்தலோடு, காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகள் 21-ல் 18 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய 3 தொகுதிகளிலும் வழக்குகளை காரணம் காட்டி தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை. விடுபட்ட 3 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில், எதிர்க்கட்சிகள் முறையிட்டுள்ளன.
இதற்கிடையில், ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் தேர்தல் தொடர்பாக போடப்பட்ட வழக்குகள் முடிந்தன. இதற்கு மத்தியில், சூலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. கனகராஜ் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதையடுத்து, சூலூர் தொகுதி காலியாக இருப்பதாக சட்டப்பேரவை செயலாளர் அறிவிப்பு வெளியிட்டார். இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதாசாகு சென்னையில் செய்தி யாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 3 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த ஆணையம் தயாராக உள்ளது என்றார். தலைமை தேர்தல் கமிஷன் தேர்தல் தேதியை முடிவு செய்து அறிவித்தால் தேர்தலை நடத்தப்படும் என்று அவர் கூறினார்.
அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் வழக்கு இன்னும் முடிவுக்கு வராததால் அங்கு தற்போது தேர்தல் நடத்த இயலாது என்ற சத்யபிரதா சாகு, திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு கிடைத் துள்ளதாகவும், அதனை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி உள்ளதாகவும் அவர் கூறினார்.
தேர்தல் பிரசாரத்தில் விதிமீறல் குறித்து அ.தி.மு.க., தி.மு.க. இரு தரப்பில் இருந்தும் புகார்கள் வந்துள்ளதாக கூறிய அவர், அந்த புகார்கள் மீது உடனடியாக விசாரிக்கப்படுகிறது என்றார். அமைச்சர் ஜெயக்குமார் அ.தி.மு.க.வுக்கு வாக்களித்தால் 1500 ரூபாய் கிடைக்கும் என்று பேசியதாக தி.மு.க. கொடுத்த புகார் மீது மாவட்ட தேர்தல் அதிகாரி விசாரணை நடத்தி வருவதாகவும்,அவரது அறிக்கை கிடைத்ததும் நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.  தமிழகத்தில் இதுவரை 30 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்ற அவர், இதில் 4.45 கோடி ரூபாய் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.  209 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும், 310 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும், இதில் 94 கிலோ தங்கம் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

Label