OUR CLIENTS
10 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும்
10 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் Posted on 25-Mar-2019 10 மாவட்டங்களில்  வெப்பம் அதிகரிக்கும்

சென்னை, மார்ச் 25-

உள்தமிழகத்தில் 10 மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு இயல்பை விட 2 முதல் 3டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடக்கு உள் கர்நாடகாவில் இருந்து உள் தமிழகம் வரை வளிமண்டலத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதாக அந்த மையம் கூறியுள்ளது. 
இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேயில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அந்த மையம் குறிப்பிட்டுள்ளது.
வேலூர்,திருவண்ணா மலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல் மற்றும் மதுரை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் நேற்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு இயல்பை விட வெப்பம் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்றும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் தெளிவாக இருக்கும் என்றும், அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 26டிகிரி செல்சியசும் வெப்பம் பதிவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Label