OUR CLIENTS
சென்னையில் 23,000 தேர்தல் சுவர் விளம்பரங்கள் அழிப்பு மாநகராட்சி ஆணையர் தகவல்
சென்னையில் 23,000 தேர்தல் சுவர் விளம்பரங்கள் அழிப்பு மாநகராட்சி ஆணையர் தகவல் Posted on 25-Mar-2019 சென்னையில் 23,000 தேர்தல் சுவர் விளம்பரங்கள் அழிப்பு மாநகராட்சி ஆணையர் தகவல்

சென்னை, மார்ச் 25-

சென்னையில் 23,000 தேர்தல் சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டுள்ளன என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் முன் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 
கொளுத்தும் வெயிலிலும், அனல் பறக்கும் வகையில் தேர்தல் பிரசாரம் நடந்து வருகிறது.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 18ம் தேதி மக்களவை தேர்தலுக்கும், காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிக்கும் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்தவுடன் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 
முறையான ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் தேர்தல் பறக்கும் படையால் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்தியில், சென்னையில் தேர்தல் பறக்கும் படைகளின் எண்ணிக்கை 3 மடங்காக உயர்த்தப்பட்டுள்ளனர்.அரசு மற்றும் தனியார் சுவர்களில் விளம்பரம் செய்யப்பட்டிருந்த 23,000 தேர்தல் விளம்பரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. தேர்தல் தொடர்பாக 68 புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளன எனத் தெரிவித்துள்ளது.

Label