OUR CLIENTS
கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டம் தடுத்து நிறுத்தம்
கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டம் தடுத்து நிறுத்தம் Posted on 25-Mar-2019 கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டம் தடுத்து நிறுத்தம்

கோயம்புத்தூர், மார்ச் 25-

கோவை மாவட்டம் சிங்காநல்லூர் அருகே மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. 

நடைபெறவுள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் போட்டியிடும் 21 வேட்பாளர்களின் முதல்கட்ட பட்டியலை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டார்.
மீதமுள்ள தொகுதிகளுக் கான வேட்பாளர்கள் பட்டியல் மற்றும் கட்சியின் தேர்தல் அறிக்கையினை வெளியிடுவேன் என்று கமல் தெரிவித்திருந்தார். கோவை மாவட்டம் சிங்காநல்லூர் அருகே மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நேற்று நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தை பறக்கும் படை போலீஸாரால்  தடுத்து நிறுத்தபட்டுள்ளது.
நேற்று காலை கோவை வந்த கமல்ஹாசன் சிங்காநல்லூர் அருகே உள்ள ராமநாதபுரம் என்னும் இடத்தில் கட்சியினரின் கலந்தாய்வுக் கூட்டம் ஒன்றை நடத்திக் கொண்டிருந்தார். 
அப்போது அங்கு வந்த தேர்தல் பறக்கும் படையினர் அந்த கூட்டத்தை தடுத்து நிறுத்தினர்.
முறையான அனுமதியின்றி நிகழ்ச்சி நடைபெற்றதாக கூறிய தேர்தல் பறக்கும் படையினர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

Label