OUR CLIENTS
இந்திய ராணுவம் அதிரடியில் பாகிஸ்தான் தளம் அழிப்பு! இந்திய வீரர் ஹரி வகார் வீரமரணம்
இந்திய ராணுவம் அதிரடியில் பாகிஸ்தான் தளம் அழிப்பு! இந்திய வீரர் ஹரி வகார் வீரமரணம் Posted on 25-Mar-2019 இந்திய ராணுவம் அதிரடியில் பாகிஸ்தான் தளம் அழிப்பு! இந்திய வீரர் ஹரி வகார் வீரமரணம்

ஸ்ரீநகர், மார்ச் 25-

 ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவம் நேற்று நடத்திய அதிரடி தாக்குதலில் எல்லையில் செயல்பட்டு வந்த பாகிஸ்தான் தளம் அழிக்கப்பட்டது. 

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச்  மாவட்டத்தில் உள்ள ஷாபூர் மற்றும் கெமி பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில் பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த ஒப்பந்த விதிகளை மீறி இந்திய பகுதியில் தாக்குதல் நடத்தியது. 
இதையடுத்து, பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்தது.  நள்ளிரவு வரை இந்த சண்டை தொடர்ந்தது. பாகிஸ்தான் படைகள் சிறிய ரக ஆயுதங்கள், பீரங்கிகளை கொண்டு இந்திய முகாம்கள் மற்றும் கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தின.
பாகிஸ்தான் ராணுவத்துடனான சண்டை நேற்று அதிகாலை 4 மணியளவில் முடிவுக்கு வந்தது. இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர்  படுகாயம் அடைந்தார். சக வீரர்கள் அவரை உடனே ராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். விசாரணையில், அவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஹரி வகார் என தெரிய வந்தது. தாக்குதல் நடைபெற்றதையடுத்து அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.  இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில், இந்திய ராணுவம் பாகிஸ்தான் தளங்களை குறிவைத்து அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஜம்மு காஷ்மீரின் அக்னூர் பிரிவில் செயல்படும் பாகிஸ்தான் தளம் ஒன்று அழிக்கப்பட்டது. இதுதொடர்பான வீடியோ ஒன்றையும் இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. அதில், பாகிஸ்தான் நாட்டின் தேசிய கொடி தலைகீழாக பறக்கிறது.  இது தீவிர ஆபத்தின் அடையாளம் என ராணுவம் தெரிவித்து உள்ளது. 

Label