OUR CLIENTS
நீல பொருளாதாரத்தில் கவனம் தேவை... குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு
நீல பொருளாதாரத்தில் கவனம் தேவை... குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு Posted on 25-Mar-2019 நீல பொருளாதாரத்தில் கவனம் தேவை... குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு

பனாஜி, மார்ச் 25-

நீல பொருளாதாரத்தில் கவனம் செலுத்தினால், உலகின் 3ஆவது பெரிய  பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா உருவெடுக்கும் என குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு நேற்று கூறினார்.

கோவா மாநிலத்திற்கு வந்துள்ள குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, பனாஜியில் உள்ள CSIR- National Institute Of Oceanography  (NIO)க்கு வந்து அராய்ச்சியாளர்கள் மத்தியில் உரையாற்றினார். இதில் பேசிய அவர், "கடல் சுற்றுச்சூழல் மேலும் சீரழிவதை தடுத்து நிறுத்தவேண்டும்" என்று கூறினார்.
"நீல பொருளாதாரத்தில் கவனம் செலுத்தவேண்டும். சமுத்திரங்களில் உள்ள கனிமங்கள் மற்றும் ஆற்றல்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தவேண்டும். அப்படி செய்தால், சர்வதேச அரங்கில் இந்தியா முதன்மை வகிக்கும். இதனால், நம் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும்" என்று தெரிவித்தார்.
அடுத்த 10-15 வருடங்களில் உலகின் 3 ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கவேண்டும் என்பதே நம் இலக்காக உள்ளது. இதற்கு, கடல்சார் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கு முக்கியத்துவம் வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
நீல பொருளாதாரத் திற்காக முன்னெடுக்கப்படும் முயற்சிகளை அனைத்திற்கும், பொது மற்றும் தனியார் துறைகள் என அனைவரும் பங்காற்றவேண்டும். அப்படி செய்தால், கடல் சுற்றுச்சூழல் சீரழிவதை தடுக்கலாம். இதில் சிஎஸ்ஐஆர் - என்ஐஓ முக்கிய பங்கு வகிக்கவேண்டும் என்று வெங்கையா நாயுடு கேட்டுக்கொண்டார். 

Label