OUR CLIENTS
டி-சர்ட்டுகளை விற்பதில் பிஸியாக உள்ள பாஜக தலைவர்கள்-பிரியங்கா காந்தி சாடல்
டி-சர்ட்டுகளை விற்பதில் பிஸியாக உள்ள பாஜக தலைவர்கள்-பிரியங்கா காந்தி சாடல் Posted on 25-Mar-2019 டி-சர்ட்டுகளை விற்பதில் பிஸியாக உள்ள பாஜக தலைவர்கள்-பிரியங்கா காந்தி சாடல்

புதுடில்லி, மார்ச் 25-

உத்தரபிரதேசத்தில் ஒப்பந்த ஆசியர்களின் அவலநிலை குறித்து கவலை தெரிவித்த பிரியங்கா காந்தி, அவர்கள் மீது கவனம் செலுத்தாமல், டி சர்ட்டுகளை விற்பனை செய்வதில் பாஜக தலைவர்கள் பிஸியாக இருப்பதாக குற்றஞ்சாட்டினார்.

உத்தர பிரதேச மாநிலத்தில், நூற்றுக்கணக்கான ஷிக்‌ஷா மித்ராஸ் என்று கூறப்படும் ஒப்பந்த ஆசியர்கள், நியாயமான வருமானம் மற்றும் உதவி ஆசியர்கள் நியமனம் ஆகிய கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இதை சுட்டிக்காட்டி பிரியங்கா காந்தி பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
பிரியங்கா காந்தி டுவிட்டரில்,”உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஒப்பந்த ஆசியர்களின் கடின உழைப்பு ஒவ்வொரு நாளும் அவமதிக்கப்பட்டு வருகிறது. இதில் பாதிக்கப்பட்ட பலர், தற்கொலை செய்துள்ளனர். தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபடுவோர்கள் போலீஸ் லத்திகளால் தாக்கப்படுகின்றனர். மேலும், தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் அவர்கள்மீது வழக்குப்பதிவும் செய்யப்படுகின்றது” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
”பாஜக தலைவர்கள் இந்த ஆசியர்களின் அவலநிலையை போக்க எந்த முயற்சியும் எடுக்காமல், டி- சர்ட்டுகளை விற்பனை செய்து வருவதில் பிஸியாக இருக்க்ன்றனர். பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மீது அரசு கவனம் செலுத்தி இருக்கவேண்டும்” என்று பிரியங்கா காந்தி குறிப்பிட்டுள்ளார்.

Label