OUR CLIENTS
20 சதவீத ஏழை குடும்பங்களுக்கு மாதத்துக்கு ரூ. 12,000-ராகுல்காந்தி தேர்தல் வாக்குறுதி
20 சதவீத ஏழை குடும்பங்களுக்கு மாதத்துக்கு ரூ. 12,000-ராகுல்காந்தி தேர்தல் வாக்குறுதி Posted on 25-Mar-2019 20 சதவீத ஏழை குடும்பங்களுக்கு மாதத்துக்கு ரூ. 12,000-ராகுல்காந்தி தேர்தல் வாக்குறுதி

புதுடெல்லி, மார்ச் 25-

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் மிக முக்கியமான தேர்தல் வாக்குறுதியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று வெளியிட்டார். அது இந்தியா முழுக்க பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.

இந்தியாவில் உள்ள 20 சதவீத ஏழை குடும்பங்களுக்கு மாதம் ஒன்றுக்கு குறைந்தபட்ச வருமானமாக 12,000 ரூபாய் மத்திய அரசு வழங்கும். காங்கிரஸ் கட்சி மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தவுடன் இந்த திட்டம் அமல் செய்யப்படும் என ராகுல்காந்தி டெல்லியில் அறிவித்தார்.
டெல்லியில் காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்துக்குப் பின் இன்று செய்தியாளர்களிடம் ராகுல காந்தி பேசினார். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையினை முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் தலைமையிலான கமிட்டி ஒன்று தயார் செய்தது. அக்கமிட்டியின் நகல் அறிக்கையினை காங்கிரஸ் கட்சியின் நிர்வாகக் குழு இன்று பரிசீலித்து தனது ஒப்புதலைத் தந்தது.
பின்னர், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் பேசும் பொழுது, அகில இந்திய அடிப்படை வருமானத் திட்டம் பற்றிக் குறிப்பிட்டார். இந்த திட்டத்துக்கு நியாய் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஏழைக்குடும்பம் ஒன்று ஏற்கெனவே ரூ.6000 சம்பாதித்தால் அந்தக் குடும்பத்துக்கு மீதமுள்ள ரூ 6000 மாதம் தோறும் வழங்கப்படும். இந்த திட்டம் உலகிலேயே மிகப்பெரிய அடிப்படை வருமானத் திட்டமாக அமையும் என ராகுல தெரிவித்தார்.
இந்த குறைந்தபட்ச வருமான திட்டத்தின்கீழ் 5 கோடி குடும்பங்கள் பயன்பெறும். இந்த குடும்பங்களைச் சேர்ந்த 25 கோடி பேர் பயனடைவார்கள். என்று ராகுல் உறுதியளித்தார்
காங்கிரஸ் கட்சி, வறுமைக்கு எதிரான தனது இறுதிப் போரை துவக்கிவிட்டது. இந்திய நாட்டில் இருந்து வறுமையை நாம் ஒழிப்போம் என்று ராகுல் காந்தி சூளுரைத்தார்.
குறைந்தபட்ச வருமான திட்டம் குறித்து விரிவாக காங்கிரஸ் கட்சி ஆய்வு செய்துள்ளது. இந்த குறைந்தபட்ச வருமானத் திட்டத்தின் பயனாக சமூகத்தில் எத்தகைய விளைவுகள் ஏற்படும் என்று ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
அது மட்டுமல்ல குறைந்தபட்ச வருமானம் திட்டத்திற்காக அரசின் நிதி செலவிடப்படும் பொழுது, அரசு திட்டங்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதா என்று புகழ் பெற்ற பொருளாதார நிபுணர்களும் அரசு திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்யும் நிபுணர்களும் பரிசீலனை செய்துள்ளனர்.
இந்த திட்டம் மிகவும் பயன்தரக்கூடிய வலிமையான திட்டம். வறுமை ஒழிப்புக்கு அடித்தளம் அமைக்கும் திட்டம். நன்கு பரிசீலிக்கப்பட்டு எல்லா விதமான அணுகுமுறைகளின் அடிப்படையிலும் ஆய்வு செய்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பல பொருளாதார நிபுணர்களின் ஆலோசனைகளை இந்த திட்டத்துக்காக நாங்கள் கோரிப் பெற்ற பிறகே ஒரு முடிவுக்கு வந்து இருக்கிறோம் என ராகுல் காந்தி கூறினார்.
கடந்த 5 ஆண்டுகளில் மக்கள் உயர்ந்த பட்ச அளவு பாதிக்கப்பட்டு விட்டனர். அவர்களின் பெரும் துயரம் கொடுமையானது. அவர்களுக்கு நியாயம் கிடைக்க, காங்கிரஸ்  நடவடிக்கை எடுக்கும் என்று ராகுல் காந்தி அறிவித்தார்.
பாஜக அரசு பணக்கார்களுக்காக இயங்குகிறது. ஆனால் காங்கிரஸ் ஏழைகளுக்காக உழைக்கிறது என்றார் ராகுல் காந்தி. நூறுநாள் வேலைவாய்ப்பு காப்புறுதிதிட்டம் காங்கிரஸ் ஆட்சியின் போது அறிமுகப்படுத்தப்பட்டது என ராகுல் காந்தி நினைவு படுத்தினார்.
பாஜக அரசின் 2016-17ம் ஆண்டு பொருளாதார ஆய்வறிக்கையில் குறைந்த வருமானத் திட்டம் பற்றி அன்று தலைமைப் பொருளாதார ஆலோசகராக இருந்த அரவிந்த் சுப்பிரமணியன் குறைந்தபட்ச வருமானத் திட்டம் பற்றிக் குறிப்பிட்டார். ஆனால் பாஜக அரசு தொடர்ந்து அந்தத் திட்டம் பற்றி பரிசீலிக்கவில்லை.

Label