OUR CLIENTS
தெலுங்கானாவில் போட்டியில்லை-தெலுங்கு தேசம் கட்சி அறிவிப்பு
தெலுங்கானாவில் போட்டியில்லை-தெலுங்கு தேசம் கட்சி அறிவிப்பு Posted on 25-Mar-2019 தெலுங்கானாவில் போட்டியில்லை-தெலுங்கு தேசம் கட்சி அறிவிப்பு

ஐதராபாத், மார்ச் 25-

தெலுங்கானா மாநிலத்தில் நடைபெறும் மக்களவை தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று தெலுங்கு தேசம் கட்சி இன்று அறிவித்துள்ளது.

மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கட்சிகள் தங்கள் கூட்டணியை முடிவு செய்து வருகின்றன. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி ஆந்திர பிரதேச மாநிலத்தில் தனித்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தது. தெலுங்கானா மாநிலத்தை பொறுத்தவரை சந்திரசேகர ராவின் ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி தனிப்பெரும்பான்மை கொண்ட கட்சியாக விளங்குகிறது.
இந்நிலையில், தெலுங்கானாவிலும் போட்டியிடும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட தெலுங்கு தேசம் கட்சி, அதிலிருந்து இன்று பின்வாங்கியுள்ளது. வரும் மக்களவை தேர்தலில் தெலுங்கானா மாநிலத்தில் போட்டியிடப்போவதில்லை என்று தெலுங்கு தேசம் கட்சி இன்று அறிவித்துள்ளது.
இதற்கிடையில், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்கள் பலரும், தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியில் சென்று இணைந்தனர். இது தெலுங்கு தேசம் கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்பட்டது. இதனை கருத்தில் வைத்து அக்கட்சி இந்த முடிவை எடுத்துள்ளதாக கருதப்படுகிறது.
சமீபத்தில் தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பெரும்பான்மையுடன் தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆட்சி அமைத்தது. அதில் தெலுங்கு தேசம் – காங்கிரஸ் கூட்டணி 19 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.
தெலுங்கு தேசம் கட்சி தொடங்கப்பட்டு 37 வருடங்கள் ஆகியுள்ள நிலையில், மக்களவை தேர்தலில் போட்டியிடாமல் இருப்பதாக அறிவித்துள்ளது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Label