OUR CLIENTS
பழனி முருகன் கோயில் பஞ்சாமிர்தம் டப்பாக்களில் தேர்தல் விழிப்புணர்வு ஸ்டிக்கர்
பழனி முருகன் கோயில் பஞ்சாமிர்தம் டப்பாக்களில் தேர்தல் விழிப்புணர்வு ஸ்டிக்கர் Posted on 25-Mar-2019 பழனி முருகன் கோயில் பஞ்சாமிர்தம் டப்பாக்களில் தேர்தல் விழிப்புணர்வு ஸ்டிக்கர்

சென்னை, மார்ச் 25-

பழனி முருகன் கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் பஞ்சாமிர்தம் டப்பாக்களில், நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவிகித வாக்களிப்பதன் அவசியம் குறித்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு, விழிப்புணர்வு பிரச்சாரம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

நாள்தோறும் திரளான பக்தர்கள் வந்து செல்லும் பழனி முருகன் கோயிலில், தமிழ்நாடு அரசின் கீழ் செயல்பட்டுவரும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில், பஞ்சாமிர்தம் தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஏப்ரல் மாதம் 18ம் தேதி நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அனைத்து வாக்காளர்களும் 100 சதவிகித வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, பக்தர்களுக்கு வழங்கப்படும் பஞ்சாமிர்தம் டப்பாக்களில் விழிப்புணர்வு பிரச்சார ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

Label