OUR CLIENTS
கார்த்தி சிதம்பரம் வெற்றிக்கு சுதர்சன நாச்சியப்பன் பாடுபடவேண்டும்-திருநாவுக்கரசர் பேட்டி
கார்த்தி சிதம்பரம் வெற்றிக்கு சுதர்சன நாச்சியப்பன் பாடுபடவேண்டும்-திருநாவுக்கரசர் பேட்டி Posted on 25-Mar-2019 கார்த்தி சிதம்பரம் வெற்றிக்கு சுதர்சன நாச்சியப்பன் பாடுபடவேண்டும்-திருநாவுக்கரசர் பேட்டி

திருச்சி, மார்ச் 25-

மக்களவை தேர்தலில் கார்த்தி சிதம்பரத்தின்  வெற்றிக்காக சுதர்சன நாச்சியப்பன் தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் இன்று கூறியுள்ளார்.


சிவகங்கை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக கார்த்தி சிதம்பரத்தை முகுல் வாஸ்னிக் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் எம்.பி.யுமான சுதர்சன நாச்சியப்பன், கார்த்தி சிதம்பரம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,சிவகங்கை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பை ஆர்வமுடன் எதிர்பார்த்து இருந்த மக்களுக்கு கார்த்தி சிதம்பரம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.காங்கிரஸ் கட்சியில் வருங்கால பிரச்னைக்கு இது காரணமாக அமைந்துவிடுமோ? என்று தோன்றுகிறது. நான் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக வருவதை ப.சி தம்பரம் தடுத்து இருக்கிறார். அமைச்சராகவும், கட்சியில் பல பொறுப்புகள் கிடைக்கவிடாமலும் எனது வளர்ச்சியை தடுத்துள்ளார்.நான் அவரை தேர்தலில் தோற்கடித்தேன் என்பதை மனதில் வைத்துக்கொண்டு இவ்வாறு செய்து கொண்டு இருக்கிறார். எனக்கு காங்கிரஸ் மீதும், சிவகங்கை மக்கள் மீதும் நம்பிக்கை இருக்கிறது. சிவகங்கை மக்களுக்கும், தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் என்னுடைய பணியைத் தொடர்ந்து செய்வேன். ப.சிதம்பரம் குடும்பத்தை மக்கள் வெறுக்கின்றனர். சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கு அவர் எந்த நன்மையும் செய்யவில்லை.பல நாடுகளில் ப.சிதம்பரம் குடும்பம் சொத்துகளை சேர்த்து உள்ளதும், கார்த்தி சிதம்பரம் ஒரு குற்றவாளியாக உள்ளதால் நீதிமன்றத்தில் என்ன நடக்கப்போகிறது என்று தெரியவில்லை? நீதிமன்ற வாசலுக்கு போக வேண்டியவர், வேட்புமனு தாக்கல் செய்ய வருகிறார். இதனால் காங்கிரஸ் கட்சிக்கு பாதிப்பு ஏற்படப்போகிறது எனக் கூறினார். திருச்சி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் இன்று திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், திருச்சி என்னுடைய சொந்த தொகுதிதான். நான் வெளியூர்க்காரன் அல்ல. திருச்சிக்கு அடிக்கடி வந்து செல்பவன். திருச்சி தொகுதியில் வெற்றி பெற்று மக்களுக்காகப் பணியாற்றுவேன். திருச்சி தொகுதியில் தொழில் வளங்களை ஏற்படுத்தி வேலை வாய்ப்பை உருவாக்குவதுதான் எனது முதல் பணியாக இருக்கும். தனது அரசியல் வளர்ச்சியை ப. சிதம்பரம்தான் தடுத்தார் என்று சுதர்சன நாச்சியப்பன் கூறுவது ஏற்கத்தக்கதல்ல என்றும் கருத்து வேறுபாடுகளை எல்லாம் மறந்து சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தின் தேர்தல் வெற்றிக்காக சுதர்சன நாச்சியப்பன் உள்பட அனைவரும் ஒன்றிணைந்து தேர்தல் பணியாற்ற வேண்டும். கார்த்திக் சிதம்பரம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டபிறகு அவர் மீது தனிப்பட்ட விமர்சனம் செய்வது, குற்றச்சாட்டுகள் சுமத்துவது ஏற்புடையது அல்ல என திருநாவுக்கரசர் கூறினார். காங்கிரஸ் ஒரு ஜனநாயகக் கட்சி, யார் வேண்டுமானாலும் வேட்பாளராக போட்டியிடலாம். நீதிமன்றத்தில் என்மீது எந்த வழக்கும் இல்லை. ஆதரமற்ற குற்றச்சாட்டுகள்தான் இருக்கிறது. நான் எனது வேட்பு மனு தாக்கலின்போது இதை குறிப்பிடுவேன் என கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார். கார்த்தி சிதம்பரத்திற்கு சீட் வழங்கியது ஏன் என்பது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி சத்தியமூர்த்தி பவனில் விளக்கம் அளித்துள்ளார்.

எச். ராஜா வேட்புமனு தாக்கல்

சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை எதிர்த்து  பாஜக வேட்பாளராக போட்டியிடும் எச். ராஜா தனது வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்துள்ளார்.

Label