OUR CLIENTS
ரூ.10 லட்சம் சீட்டு பணம் 'ஸ்வாஹா' பணம் கேட்டவருக்கு கொலை மிரட்டல்!
ரூ.10 லட்சம் சீட்டு பணம் 'ஸ்வாஹா' பணம் கேட்டவருக்கு கொலை மிரட்டல்! Posted on 26-Mar-2019 ரூ.10 லட்சம் சீட்டு பணம் 'ஸ்வாஹா' பணம் கேட்டவருக்கு கொலை மிரட்டல்!

வேலூர், மார்ச் 26-

வேலூர் மாவட்டம், வாலாஜா, எண்.106, சுமைதாங்கி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ஜி.அசோகன். அவரது மனைவி தமிழரசி(47).

இவரிடம் அதே ஊரைச் சேர்ந்த பி.நாராயணன், அவரது மகன் என்.டெல்லிபாபு, எஸ்.கே.ராஜேந்திரன், அவரது மனைவி ஆர்.அனுசுயா ஆகியோர் கடந்த 2015ம் ஆண்டு அணுகி தாங்கள் சீட்டு நடத்தி வருவதாகவும், அவர்கள் அரசு பணியில் இருந்தவர்கள் என்றும் தங்களுக்கு நிறைய சொத்துக்கள் உள்ளது என்றும் தன்னிலை விளக்கம் அளித்துள்ளனர். நீங்கள் எங்களிடம் சீட்டு கட்டலாம் என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளனர். இதை நம்பிய தமிழரசி கடந்த 2016ம் ஆண்டு முதல் மாதா மாதம் தவறாமல் ரூ.10 லட்சத்துக்கு சீட்டு கட்டி வந்துள்ளார். கடந்த 5.9.2018 ரூ.10 லட்சம் முழுவதும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கடைசி சீட்டு கட்டி முடிந்த நிலையில் எங்களுக்கு சேர வேண்டிய பணத்தை தருமாறு கேட்ட தமிழரசி, நாராயணன் தரப்பினரை தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். அதற்கு நாராயணன் தரப்பினர் ஒரு மாதத்தில் பணம் முழுவதும் கொடுத்து விடுவதாக அப்போது பதில் கூறியுள்ளனர். இரண்டு மாதங்கள் கழித்து மீண்டும் சென்று பணத்தை கேட்டபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர். தமிழரசி அக்கம் பக்கம் விசாரித்துள்ளார். அதில் அவர்கள், நிலத்தை அண்மையில் விற்பனை செய்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து எனது சீட்டு பணம் ரூ.10 லட்சத்தை தருமாறு தமிழரசி அவர்களிடம் கேட்டுள்ளார். இதற்கு நாராயணன் தரப்பினர் ஒன்று சேர்ந்து கொண்டு தமிழரசியை தகாத வார்த்தைகளால் திட்டியும், இனிமேல் பணம் கேட்டுவந்தால் அடியாட்களை வைத்து தீர்த்து கட்டி விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதைத்தொடர்ந்து காவல் நிலையத்தில் தமிழரசி கொடுத்த புகார் மனுவையும் காவல் நிலையத்தில் வாங்க மறுப்பு தெரிவித்து திருப்பி அனுப்பியுள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட தமிழரசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று நேரில் வந்து புகார் மனு கொடுத்தார். அதில் தன்னை மிரட்டி சீட்டு பணத்தை திருப்பித்தர மறுத்து ஏமாற்றும் நோக்கத்தில் செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தனது சீட்டு பணம் ரூ.10 லட்சத்தை மீட்டு தருமாறும் புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் தொடர்புடைய காவல் நிலையத்துக்கு உத்தரவிட்டுள்ளார். 

Label