OUR CLIENTS
வேலூர் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு 12173 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்!
வேலூர் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு 12173 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்! Posted on 26-Mar-2019 வேலூர் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு 12173 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்!

வேலூர், மார்ச் 26-

வேலூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்காக 12173 மின்னணு வாக்குப்பதிவு, கட்டுப்பாட்டு மற்றும் உறுதிபடுத்திக் கொள்ளும் இயந்திரங்கள் வேலூர் தலைமை யிடத்திலிருந்து 13 சட்டமன்ற தொகுதிகளுக்கும் அனுப்பி வைக்கும் பணியினை அனைத்து அரசியல் கட்சிப் பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான சி.அ.ராமன் பார்வையிட்டார்.

வேலூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலுக்காக பயன்படுத்தப்படும் 12173 மின்னணு வாக்குப்பதிவு, கட்டுப்பாட்டு மற்றும் உறுதிபடுத்திக்கொள்ளும் இயந்திரங்கள் வேலூர் வேளாண் விற்பனை மையம், வேலூர் மாவட்ட ஆட்சியார் அலுவலகம் மற்றும் மாவட்ட ஊராட்சிக்குழு அலுவலகம் ஆகிய 3 இடங்களில் உள்ள பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரங்களை நேற்று (25.03.2019) வேலூர் வேளாண் விற்பனை மைய கூடத்திலிருந்து 13 சட்டமன்ற தொகுதி களுக்கும் அனுப்பி வைக்கும் பணியினை அனைத்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் அந்தந்த சட்டமன்ற பகுதிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பட்டியலில் உள்ளதை சரி பார்த்து  அனுப்பப்படுவதை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சி.அ.ராமன் பார்வையிட்டார். இப்பணிகளுக்காக இயந்திரங்களை கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணி 23.03.2019 அன்று அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் தேர்வு செய்யப்பட்டது.

Label