OUR CLIENTS
தேர்தல் பணியிலிருந்து விலக அலைக்கழிப்பு அலுவலர்கள் கடுமையாக குற்றச்சாட்டு பதிவு!
தேர்தல் பணியிலிருந்து விலக அலைக்கழிப்பு அலுவலர்கள் கடுமையாக குற்றச்சாட்டு பதிவு! Posted on 26-Mar-2019 தேர்தல் பணியிலிருந்து விலக அலைக்கழிப்பு அலுவலர்கள் கடுமையாக குற்றச்சாட்டு பதிவு!

வேலூர், மார்ச் 26-

தேர்தல் பணியிலிருந்து விலகுவதற்கு மனு அளிக்க தொடர்ந்து அலைக்கழிப்பு செய்யப்படுவதாக உடல்நிலை பாதிக்கப்பட்ட, கர்ப்பிணி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மக்களவைத் தேர்தலையொட்டி வேலூர் மாவட்டத்திலுள்ள 3,473 வாக்குச்சாவடிகளில் பணிபுரிய வருவாய்த் துறை, கல்வித் துறை, ஊரக வளர்ச்சித் துறை, வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 18 ஆயிரத்து 848 வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு 4 கட்டங்களாக தேர்தல் பயிற்சி அளிக்கப்படுகிறது. முதல்கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
இந்நிலையில், தேர்தல் பணியில் இருந்து விலகக் கோரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சிலர் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலத்துக்கு ஞாயிற்றுக்கிழமை காலை மனுவுடன் வந்தனர். ஆனால் அவர்களிடம் மனுக்களைப் பெற மறுத்த தேர்தல் பிரிவு அலுவலர்கள், அவரவர் துறை உயர் அலுவலர்களிடம் மனு அளித்தால் போதும் எனக் கூறி திருப்பியனுப்பினர்.
இதனால், ஏமாற்றமடைந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், உடல்நிலை பாதிக்கப்பட்ட, கர்ப்பிணி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தேர்தல் பணியில் இருந்து விலக்களிக்க அந்தந்தப் பள்ளித் தலைமையாசிரியர்கள், அவரவர் அலுவலக உயர் அலுவலர்களிடம் மனு அளித்தோம். ஆனால், அவர்கள் தேர்தல் பணி குறித்து தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது எனக் கூறி ஆட்சியர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தனர். தேர்தல் நேரத்தில் ஆட்சியரை அவ்வளவு எளிதில் சந்திக்க முடியுமா?, அப்படியே அவரை சந்தித்தாலும் இதுபோன்ற வேலைகளை முடித்து கொள்ள முடியுமா?. இப்படி இயலாதவர்களை பாடாய் படுத்தும் அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும் என்பதே அவர்களது எதிர்பார்ப்பாகும். இல்லையெனில் மாவட்ட ஆட்சியர் இதுபோன்ற ஊழியர்களை பார்க்கும் நேரம் எதுவென குறிப்பிட்டு அறிவிப்பு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.
இந்நிலையில், ஆட்சியர் அலுவலக தேர்தல் பிரிவு அலுவலர்கள், எங்களிடம் நேரடியாக யாரும் பேசக் கூடாது. சம்பந்தப்பட்ட துறை உயரதிகாரிகளிடம் மனுக் கொடுத்து பேசுங்கள் எனக் கூறிவிட்டனர். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் எங்களது உயரதிகாரிகளைச் சந்திக்க இயலவில்லை. தேர்தல் பணியில் இருந்து விலக்களிக்க கோரினால் அலைக்கழிப்பு செய்யப்படுவதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர். இதற்கு மாவட்ட ஆட்சியர் ராமன் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

Label