OUR CLIENTS
சேதமடைந்த கட்டடங்களில் வாக்குச்சாவடி மையங்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்படுமா?
சேதமடைந்த கட்டடங்களில் வாக்குச்சாவடி மையங்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்படுமா? Posted on 26-Mar-2019 சேதமடைந்த கட்டடங்களில் வாக்குச்சாவடி மையங்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்படுமா?

திருவண்ணாமலை, மார்ச் 26-

போளூர் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட சேதரம்பட்டு, ஏரிக்குப்பம் பகுதிகளில் சேதமடைந்த கட்டடங்களில் அமைக்கப்படவுள்ள வாக்குச்சாவடி மையங்களை வேறு பகுதிகளுக்கு மாற்ற தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், போளூர் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட முனியன்குடிசை, செட்டியந்தல், செட்டியந்தல் காலனி, சேதரம்பட்டு காலனி ஆகியவற்றை உள்ளடக்கிய சேதரம்பட்டு ஊராட்சியைச் சேர்ந்த 1,200 வாக்காளர்களுக்கு சேதரம்பட்டு கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 2 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
 இந்தப் பள்ளிக் கட்டடத்தின் கூரை ஓடுகள் உடைந்தும், மரத்தாலான சட்டங்கள் சேதமடைந்தும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும், வாக்குப்பதிவு நேரத்தின்போது மழை வந்தால், இந்த வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மழை நீரில் நனையும் அபாயம் உள்ளது. இதேபோல, போளூரை அடுத்த ஏரிக்குப்பம் ஊராட்சியிலும் அமைக்கப்பட வாக்குச் சாவடி மையக் கட்டடம் சிதிலமடைந்து உள்ளது.
எனவே, இந்த 2 ஊராட்சிகளிலும் அமைக்கப்படவுள்ள வாக்குச்சாவடி மையங்களை வேறு பகுதிகளுக்கு மாற்ற தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாக்காளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Label