OUR CLIENTS
ஜவகர் நகரில் பாய்ந்தோடும் கழிவுநீர்!
ஜவகர் நகரில் பாய்ந்தோடும் கழிவுநீர்! Posted on 26-Mar-2019 ஜவகர் நகரில் பாய்ந்தோடும் கழிவுநீர்!

திருவள்ளூர், மார்ச் 26-

பாதாள சாக்கடை மூடி உடைந்து, கழிவுநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடுவதால், ஜவகர் நகர் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்டது நேதாஜி சாலை அருகில் உள்ளது ஜவகர் நகர். இரண்டாவது வார்டுக்கு உட்பட்ட இங்கு 500 வீடுகள் உள்ளன. வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், பாதாள சாக்கடை இணைப்பு மூலம் அகற்றப்படுகிறது.இந்த நிலையில் நகரின் பிரதான சாலையில் பாதாள சாக்கடையின் ஆள் நுழைவு மூடி உடைந்து விட்டது. இதனால் கழிவுநீர் ஆறாக பெருக்கெடுத்து, சாலையில் தேங்கி உள்ளது. கழிவுநீர் தேங்கி இருப்பதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.மேலும் கொசு உற்பத்தியாக நோய் பரப்பும் அபாயமும் உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக சேதமடைந்த பாதாள சாக்கடை மூடியை சீர்படுத்தியும் சாக்கடை அடைப்பினை அகற்றி கழிவுநீர் வெளியேறாமல் 
நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Label